சமாதானம்
ஒரே சமயத்தில் உலகம் முற்றிலும் மாறி இருந்தது.2026 ல் அவர்கள் இருந்த இடம் 2019ல் இருந்த இடம் போல் தோற்றம் அளித்தது. அவர்கள் இருந்த இடம் மட்டும் இல்லை மொத்த உலகமும் காலப்பயணம் செய்திருந்தது.கால பயணத்தோடு 1952 காலக்கட்டம் போல் தோற்றம் அளித்தது. சுருக்கமாக சொன்னால் உங்கள் வீட்டின் ஒரு பாதி 1952 ல் இருந்தது போல் தோற்றம் அளிக்கும் ஒரு பாதி இன்று இருப்பது போல் தோற்ற மளிக்கும்.உங்கள் வீடு இருக்கும் இடத்தில் 1952 ல் ஒரு வீடு இருந்திருந்தால் நீங்களும் அவர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருப்பர்.வெயிலில் சுற்றி பார்க்கும் போது வெப்ப காற்று அடிக்கடி கண்ணுக்கு தெரியுமல்லவா அது போல் வெளிச்ச அலைகள் கால மாற்றத்தால் பூமியில் உழன்றுகொண்டிருந்தனர்.ஒட்டு மொத்தத்தில் இரு காலகட்டங்கள் (1952,2026) ஒரு கால காலகட்டமாக(2019) மாறியது.
மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.ஐன்ஸ்டீன் அந்த பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தார் புது விதமான சூழ்நிலை எதிர்காலமும் இல்லை நிகழ் காலமும் இல்லை கடந்தகாலமும் இல்லை.1952 ஸ்டைல் குறுகிய சாலை 2019 காங்கிரிட் ரோட்டில் பல மக்கள் பதட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தனர்.மக்களை பார்த்த ஐன்ஸ்டீனும் பதட்டத்தில் திரும்பி ஓட ஆரம்பித்தார். அவர் ஓடிக்கொண்டிருக்கும் போது போர்ட் எஸ்கேப் ஹைபிரிட் கார் அவர் முன் வந்து நின்றது. அவர் அதிர்ந்தார் அந்த ட்ரைவர் "சார் உலகமே பதட்டத்தில் இருக்கு இரு காலகட்ட உலக தலைவர்களும் மான்செஸ்டர் ல பேச்சு வார்த்தை நடத்தலாம்னு இருக்காங்க பிளைட்ல போயிரலாம் வாங்க" என கத்தினார். ஐன்ஸ்டீன் காரில் ஏறினார்.
"இரு காலக்கட்டமா" என கேட்டார்.
"ஆமா மிலா டெமிர் தா சொன்னாங்க"
"என்ன"
"அவங்க 2026 கால ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங் ட்ரெயின் தியரியை சோதனை பண்ணும்போது இரண்டு காலமும் இணைந்திருச்சு அவர்தா உங்களையும் பிற உலக தலைவர்களையும் கூட்டிட்டு வர சொல்லி இருக்கார் மக்கள் பதட்டத்தை போக்க"
"சரி சீக்கிரம் போங்க" என்றார் ஐன்ஸ்டீன் அந்த கார் பாய்ந்தது.
16 மணி நேரத்திற்கு பிறகு,மான்செஸ்டர்.
2019 க்கு பிறகு பிறந்தவர்களும் 2020 களில் உருவாக்கப்பட்ட பொருட்கள் மயமாகின. உலகம் பதட்டத்தில் ஆழ்ந்தது ஒரு சிலர் தங்கள் அருகில் இருந்த வேறு காலகட்டத்தை சேர்ந்தவர்களை பயத்தால் அடித்து கொன்றனர். காடுகள் அழிக்கப்பட்டு வீடுகளை கட்டியிருந்த மனிதர்கள் நிலை இன்னும் மோசம் 50 களில் வாழ்ந்த அந்த விலங்குகள் 2000 ம்களில் பிழைத்த மனிதர்களை வேட்டையாடி கொன்றன.ஆங்காங்கே இருந்த அறிவியலாளர்கள் மக்களுக்கு உண்மையை உணர்த்தி சமாதானம் அடைய செய்தனர்.பல நகரம் அமைதியை அடைந்தது காரணம் மக்கள்.மான்செஸ்டர் பீதம் டவரில் இரு கால கட்ட தலைவர்களும் சந்திக்க மிலா டெமிர் ஏற்பாடு செய்திருந்தார்.மிலா டெமிர் எனும் இந்த 43 வயது இரும்பு பெண்மணி தான் மாற்றத்தை உடனே உணர்ந்தார்.2019 ல் திட்டத்தை அங்கீகரித்த தலைவர்கள் அங்கேயே இருந்ததால் உடனடியாக அவர்களிடம் தெரிவித்து மான்செஸ்டரில் கூட்டினார். உடனடியாக மாறிய காலத்தையும் தன் அறிவால் உணர்ந்து அவர்கள் இருப்பிடத்தையும் கண்டறிந்து கூட்டி வர செய்தார்.மிலா டெமிர் ஒரு புத்தக பிரியை அறிவியல் மட்டுமல்ல வரலாறு படிப்பதிலும் ஆர்வம் கொண்டவர் அதனாலேயே இது அவரால் முடிந்தது.ஒரே ஒரு கவலை அந்த ட்ரைனும் தண்டவாளங்களும் மாயமானது.
மக்கள் குழப்பத்தில் இருக்க உலகின் மிக முக்கிய தலைவர்களான (இரு கால கட்ட தலைவர்கள்)
வடகொரிய அதிபர்(2019) கீம்,ஜப்பான் அதிபர்( 1952) ஷிகேறு ஹோஷிடா ஜப்பான் அதிபர்( 2019) ஷின்ஜோ அபே,சீன அதிபர்(1952) மா சேதுங் சீன அதிபர் (2019) ஸீ ஜின் பிங்க்,துருக்கி ஜெனரல் (2019) ஹலூஸி அகார்,இஸ்ரேல் அதிபர்( 2019) ரேவேன் ரிவ்லின்,இஸ்ரேல் பிரமுகர் ரோத்சைல்டு
ஜெர்மன் அதிபர் (1952) வில்ஹெம் பெக் ஜெர்மன் அதிபர்(2019) பிராங்க் வால்டர் ஸ்டீன்மெய்ர், பிரான்ஸ் அதிபர்(1952) ரீனே கோட்டி பிரான்ஸ் அதிபர்(2019) இம்மானுவேல் மக்ரோன்,இங்கிலாந்து அதிபர் (1952) வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து அதிபர்(2019)தெரசா மே ,அமெரிக்கா அதிபர்(1952) ஹாரி ட்ரு மேன் துணை அதிபர் டவையிட்.டி. ஐஸேன்ஹோவர் அமெரிக்கா அதிபர்(2019) டொனால்ட் டிரம்ப் மெலானவுடன்,கியூபா அதிபர்(2019)ரவுல் காஸ்ட்ரோ,சோவியத் அதிபர்(1952) ஜோசப் ஸ்டாலின் ரஷ்யா அதிபர்(2019) விளாடிமிர் புடின்,இந்தியா ஜெனரல்(1952) கே.எம்.கரியப்பா இந்திய ஜெனரல்(2019) பிபின் ராவத் மற்றும் பல உலக தலைவர்கள் அந்த வேற்று கொட்டும் பீதம் டவரில் விசிறி கொண்டிருந்தனர்.
தலைவர்களின் இன்ஸ்பிரஷன் அவர்கள் எதிரேயே அமர்ந்திருக்க அவர்களுக்கு ஆர்வம் தாங்கவில்லை பிபின் கரியப்பா ரவுல் காஸ்ட்ரோவுடன் தொடர்ந்து பேச்சு கொடுத்து கொண்டிருந்தார்
புதின் ஐஸேன்ஹோவெர் மற்றும் ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருந்தார். டிரம்ப் மிலா டெமிருடன் கடலை போட்டு கொண்டிருந்தார்.உடனே சர்ச்சில் "இப்போ எதுக்கு இங்க வந்துருக்கோம்" என கத்தினார்.அனைவரும் சர்ச்சிலை திரும்பி பார்த்தனர் டிரம்ப் தனது சாம்சங் தங்க நிற போனின் திரையில் விரலை தேய்த்துவிட்டு "எப்போ நெட்ஒர்க் கிடைக்கும்" என ட்ருமனிடம் கேட்டார் ட்ரூமன் தனது புருவத்தை உயர்த்தினார்.
"இங்க பாருங்க நாம மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பனும்னு இங்க இருக்கோம் மிஸ்ஸஸ் இதெல்லாம் உங்க தப்புதான் என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்க" என மிலா டெமிரிடம் கேட்டார் சர்ச்சில்.
மிலா ட்ரைன் தியரி யை விலக்கிவிட்டு
"ஒளியை விட ஒரு பொருள் வேகமா போகும்போது அது இன்னொரு டைமென்ஷன் கதவை திறக்க வாய்ப்பிருக்கு இப்போ அது இன்னொரு கால கட்டத்தை திறந்துருச்சு இதுக்கு நான்தான் முழு காரணம்" என பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மிலா.
"இரண்டு கால கட்டங்களை சேர்ந்த ஒரே ஆள் ஒண்ணா இருப்பது ஆபத்துதானாமா ம்..... படிச்சுருக்கன்" என கூறினார் ஜெனரல்.கரியப்பா.
"ஆமா உடனடியா மக்களுக்கு இத தெரியபடுத்தனும் இல்ல பயத்தால நிறைய இழப்பு ஏற்படும்" என்றார் ஜ்யோங் க்யோய்ங் டூ(தென் கொரியா ஜெனரல்).
அனைவரும் ஆலோசனையில் ஆழ்ந்தனர். ஐன்ஸ்டீன் பரபரவென ஆலோசனை கூடத்தில் நுழைந்தார்.அனைவரும் அவரை பார்த்து எழுந்து நின்றனர்(டிரம்ப் தவிர) "வேனாம் உட்காருங்க என" பணித்தார் ஆல்பர்ட்.
"இதுக்கு நீங்காத ஒரு நல்ல முடிவை தரணும் ஆல்பர்ட்" என்றார் ஸ்டாலின்.
"ஒரு நிமிஷம் பாடிஸ்டா எங்கே? " என கேட்டார் இம்மானுவேல்.
"பாடிஸ்டா இறந்துட்டாரு" என்றார் ஐஸேன்ஹோவர்.
"எப்படி" என கேட்டார் இம்மானுவேல்.
"பிடல் தா கொன்னுட்டாரு" என்றார் புதின்.
"53 லதான சர்வாதிகாரத்திற்கு எதிரா தாக்குதல் நடத்தினார்." - இம்மானுவேல்.
"இல்ல 52 லேயே முயற்சி பண்ணாரு" என்றார் ரவுல்.
"குழப்பத்தை பயன்படுத்தி வென்றுட்டார்" -புதின் .
"இங்க நா உக்காந்துட்டு இருந்தாலும் அங்க இந்நேரம் என் கைல இருக்கும் ரத்த கரைய ரசிச்சுட்டு இருப்பேன்"-ரவுல்.
"சரி ராணி எங்க?" என கேட்டார் ஆல்பர்ட்.
"எலிஸிபத் அவங்க கூட பேசிட்டு இருக்காங்க" என சிரித்துக்கொண்டே சொன்னார் ஸ்டாலின். நோய்வாய் பட்டிருந்த ஸ்டாலினுக்கு அந்த சிரிப்பு கொஞ்சம் தெம்பை ஊட்டியது.
ஆலோசனை கூடத்திற்கு வெளியே,
92 வயது ராணி எலிசபெத் 26 வயது இளம் ராணி எலிசபெத்துடன் பேசி கொண்டிருந்தார்.
"நாம உள்ளேபோக வேண்டாமா உள்ள எல்லாரும் ....." -இளம் எலிசபெத்.
"நாம போக தேவையில்லைமா" -எலிசபெத்
"அப்போ எப்படி உள்ள பேசறது தெரியும்" -இளம் எலிசபெத்.
"நமக்கு அவங்களே வந்து சொல்லுவாங்கமா" - எலிசபெத்
"ஓ.... அப்படியா ந. .நா நினை. ..நனைச்சே பாக்கல உங்கள. .ச்சீ என்ன நா பாப்ன்னு" என பதட்டத்துடன் உளறினார்.
"நா அதாவது நீ இப்படித்த துறுதுறுன்னு இருந்தேன் டால் பிறந்ததுக்கு அப்போரம்தா நம்மள சுற்றி என்ன நடக்குதுன்னு உணர்ந்த நீ நிறைய கத்துக்க வேண்டியது இருக்குமா"
"பிலிப் எப்படி இருக்காரு ஆன்,சார்லஸ் எப்படி இருக்காங்க எனக்கு எத்தனை குழந்தை பிறந்தாங்க"
"எனக்கே என் மேல் சந்தேகமா இருக்கும் நா நல்ல ஒரு குடும்ப பெண்ணானு உன் மூலமா அந்த சந்தேகம் தீர்ந்துச்சு பிலிப் உன் பிலிப் கூடாதான போனாரு பாக்கிலிய நீ ரொம்ப பகல் கனவு காணுவண்ணு எனக்கு தெரியும். உனக்கு மொத்தம் நாலு குழந்தை."
"நா அவங்கள பாக்கலாமா"
"தெரியல,அவங்க என்ன முடிவெடுக்கறாங்கன்னு பாப்போம்"
"ஏன் அவங்கள பாக்க கூடாது?"
ஆலோசனை கூடம்
பேச்சு வார்த்தை 3 மணி நேரம் தொடர்ந்தது.
"இப்போ எலிசபெத் தன் இளம் வயதுடன் பேசறதே தப்பு" என்றார் ஐன்ஸ்டீன்.
"அது இயற்கைக்கு எதிரானது" என்றார் மிலா.
"இரு காலகட்டத்தை சேர்ந்தவங்க ஒண்ணா இருக்கறதே தப்புதானே"-புதின்.
"அப்போ என்ன பண்றது"-ஐஸேன்ஹோவர்
"மக்களை பிரிக்கணும்" என்றார் ஐன்ஸ்டீன்.
"எப்படி?" - சர்ச்சில்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
21 மணி நேரத்திற்கு பிறகு
பீதம் டவரின் வெளியே ஒரு சில தலைவர்கள் வந்திருந்தனர் ஸ்டாலின் ஐஸேன்ஹோவர் கொரியா அதிபர்கள் கிளம்ப வேண்டிய கட்டாயம் காரணம் ஏனெனில் தீர்மானம் அப்படி.
ஆரம்பித்த மிலா வே பிரச்னையை முடிக்கும் தீர்மானத்தை தொடங்கினார்.மக்கள் அந்த டவரின் முன் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர்.அரசாங்கத்திற்கு எதிராக கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
"மதிப்பு மிகுந்த மக்களே அறிவியல் எனும் கடவுள் நமக்கு எதிராக சாத்தனாக வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை அறிவியலாளர்களுக்கு தெரியும் இரு கால கட்டத்தை சேர்ந்தோர் ஒரே இடத்தில் இருந்தால் என்னவாகும் என்று ஏனோ விதி நம்மை தண்டிக்கவில்லை" என்றவுடன் மக்கள் கூட்டம் கூச்சலிட்டது "authority down down" என்றும் "மிலா down " என்று கூச்சலிட்டது மிலா நிறுத்தி கூற ஆரம்பித்தார் உரக்க "ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் கூடிய விரைவில் உலகம் பழைய நிலைக்கு திரும்பும் அதுவரை 2000 மாம் மக்கள் அமெரிக்க ஐரோப்பா கண்டங்கள் அதாவது உலகின் ஒரு பாதி மேற்கு திசையிலும் 50 கள் மக்கள் ஆசியா ரஷ்யா ஆஸ்திரேலிய உலகின் மற்றொரு பாதி கிழக்கு திசையிலும் குடியமர்த்தப்படுவார்கள்.மக்கள் பொறுமை காக்க வேண்டும்.ஆட்சியாளர்கள் இந்த பீதம் டவரில் வாரம் ஒரு முறை கூடி மக்களுக்கு தேவையான உணவு,கல்வி,சுகாதாரம், மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.இதுவே அமைதிக்கான ஒரே வழி" என கூறி நகர்ந்தார்.
அந்தந்த கால கட்ட மக்கள் கிழக்கு மேற்கு பகுதிகளுக்கு அந்தந்த நாட்டின் ராணுவம் மூலம் கொண்டு செல்ல பட்டனர்.
7 வது நாள்
அமெரிக்கா,மான்ஹாட்டன், டிரம்ப் டவர்
6 நாட்களில் மக்கள் அந்தந்த காலகட்ட மக்கள் அந்தந்த திசைகளில் குடியமர்த்தப்பட்டனர்.வீடு அல்லாதவற்கு முகாம் அமைக்க பட்டிருந்தது.மக்கள் குடியமர்த்தப்படும்போது நெரிசலால் மக்கள் பலர் இறந்தனர்.50 களில் பிறந்த ஒருவற்கு மாற்றம் ஏற்படுமாயின் அது 2000 த்தில் இருக்கும் அவருக்கு அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
டிரம்ப் தனது மகன் டொனால்டை அழைத்திருந்தார். டொனல்டும் ஹாலில் நடந்து வந்து கொண்டிருந்தார்."ஹே டொனால்ட் கம் " என்றார் ஒரு முதியவர் அவரை கட்டிப்பிடித்தார்.
"எப்படி இருக்கீங்க"
"நா நல்லா இருக்கான்"
"ஏன் பிரென்ட் கேட்டாரு இந்த கால கட்டத்தை சேர்ந்த ஒரு தலைவரை அந்த கால கட்டத்தை ஒருத்தர் சுட்ட என்ன ஆகும்னு"
"இல்ல டிரம்ப் கூப்பிட்டார் நான் அப்பறோம் வந்து பதில் சொல்றேன்" என்று கூறி கிளம்பினார்.அவர் சொன்னதை யோசித்து கொண்டே கிளம்பினார்.டிரம்ப் பின் ரூமினுள் நுழைந்தார்.
"நான் நேத்து சொன்னதை யோசிச்சியா son" என கேட்டார் டிரம்ப்.
"ப்ரெசிடெண்ட் அதெல்ல. ....."
"டாட் னே கூப்பிடு டொனால்ட். "
"அதெல்லா முடியாது டாட் " என குரலை தாழ்த்தி சொன்னார்.
"டொனால்ட் இது உலக அமைதிக்காக"
"எதுக்காகவும் முடியாது" என கத்தினார் டொனால்ட்.
டிரம்ப் டொனால்டின் கன்னத்தில் கைவைத்தார் டொனால்ட் தட்டிவிட்டார் மறுபடியும் டொனால்டின் இரு கன்னத்தையும் தன் இரு கைகளால் பற்றினார்.
"உன்னால மட்டும்தா முடியும் டொனால்ட் உன்ன மட்டும்தா நா நம்புற உன் டாட் ஹீரோதான எனக்காக" என கூறி கையில் ஒரு கன் னை கொடுத்தார்.
-தொடரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக