திங்கள், 14 மே, 2018

பிரித்தாள்

மலரே மலராதே:

   கி.பி.1872
                தண்ணீர் வற்றிய தென்னை மரங்கள் காய்ந்து கிடக்கும் மரங்கள் அதனூடே பனிப்போல் படர்ந்திருக்கும் குடிசைகள்.வடக்கு நோக்கி
செல்ல கிளை வடிவிலான தெருக்கள் அலங்கோலமாய் அடுக்கி வைத்தாற்ப்போல் இருக்கும் குடிசைகள்.அதில் ஓர் குடிசையில் இடைவிடா அழுக்குரல்
“பார்த்து வளத்த பொண்ணு சமைஞ்சுட்டான்னு சந்தோசபடறதா இல்ல பாழப்போன ஊர்ல பொண்ணா பொறந்துட்டான்னு தலைய இடிச்சுக்கறதா”
என ஓரு மதிக்கத்தக்க தாய் அழுதுக்கொண்டிருக்க “என்ன முனகல் சத்தம் வெளிய வரைக்கும் கேக்குது” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் மாராப்
பை சரிசெய்து அவள் அருகே சம்மனமிட்டு அமர்ந்தாள்.பிறை நிலா போன்ற நெற்றியை உடையவள் அவள் பதுமை என்ற சொல்லிற்கு உரித்தானவள்
நாங்கிலி என்ற பெயரை உடையவள். “இப்ப என்ன ஆச்சு பொண்ணு சமைஞ்சுட்டா அவ்ளோதான இனிமே நா பாத்துக்குறன்  நீங்க பயப்படாதீங்க நீங்க நனைக்கற
மாறி ஒன்னும் நடக்காது”.என்று ஆறுதல் படுத்தி எதிர் மூலையில் இருக்கும் வேதாகியை பார்த்தாள்.அதிகாலை வேளையில் புதிதாய் மலர்ந்த மலர் போலே
இப்போதே பூத்த பூ போல அமர்ந்திருந்தாள்வேதாகி கரிய நிற உதடுகளை உடையவள் கருப்பு அழகுகளை உடையவள். ஊரையே தன் வாயால் விற்று
விடுவாள் அந்த அளவிற்கு வாயாடி.யாரா இருந்தாலும் எதிர்த்து பேசும் துணிச்சல் உடையவள்.“அந்த இராட்சஸ பயலுகள நனைச்சாத பயம் வருது”
என வேதாகியின் தாய் கூறினாள்.அது தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீசை வளர்ப்பதற்கும் பெண்கள் மார்பை மறைப்பதற்கும் வரி கட்ட பணிக்கப்பட்ட
கொடூர பூமி திருவிதாங்கூர் சமஸ்தானம்இகேத்தலா வட்டம்.போருக்காக இராணுவ செலவுகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வரி சுமத்தப்பட்டது.
சோற்றை கஞ்சி என்றும் வீட்டை குடிசை என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர்.எதற்கெடுத்தாலும் வரி கட்ட வற்புறுத்தப்பட்டனர்.
 அத்தகைய இரத்த பூமியிலே நாம்  பயணிக்கப்போகிறோம்.

முட்களின் நடுவே ரோஜா:

                   திருவிதாங்கூர் சமஸ்தானம் முக்கால்பங்கு பச்சைபசேல் என இருக்கும் தென்னை தோட்டங்களையும் அதன் நடுவே செம்மண்
 குடிசைகளால் அமைக்கப்பட்ட சாலைகள் என காட்சியளிக்கும்.அது தனது பெருவருவாயை தென்னை தோட்டங்கள் மூலமே ஈட்டுகிறது அதில் காய்க்கும்
 காய்களை பிரிட்டிஷ்  கம்பெனியிடம் விற்கிறது.பின் மீனவர்கள் உழைப்பை சுரண்டி வாழ்கிறது தென்னை மரங்களின் நடுவே நிலத்தில் உப்பை பரப்பி
 அதில் ஒருவனை மண்டியிட வைத்து சாட்டையால் அடித்து பின்வருவனவற்றை கூற செய்தனர். “ம் சொல்லு உப்புக்கு ஆயம் கட்டறேனு சொல்லு”
 அதற்கு அம்மனிதனும் “கட்றேன் கட்றேன்” என கதறினான்.இதையெல்லாம்ஒர் மேட்டினின்று அமர்ந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்க பின்னால்
 நால்வர் விளையாடிக்கொண்டிருந்தனர்.அந்த ஐ;வரே சமஸ்தானத்தின் அரசனின் மகன்கள்பதின் பருவம் அடைந்தவர்கள்;.அரசனின் மகன் என்று கர்வம்
 கொண்டவர்கள் பெண்களை தொந்தரவு செய்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள்.இவர்களின்விளையாட்டே மற்றவர்களை தொந்தரவு செய்வது.
அதில் ஒருவன் மட்டுமே விதிவிலக்கு தன் தாயை தவிர மற்ற பெண்களுடன் பேச தெரியாதவன்இபெண்களைஏறெடுத்துக்கூட பார்க்காதவன்இ
 பொய் பேச தெரியாதவன்இ தர்மத்தின் வழி நடப்பவன் சுருக்கமாக கூறின் முட்கள் நடுவே பூத்த ரோஜா அவன்.அவன் பெயர்விபி.பதினெட்டு வயதுடையவன்
விபியை எப்பொழுதும் அவன் சகோதரர்கள் அவனை தங்களைப் போலவே வாழவேண்டும் என கட்டாயப்படுத்தினர்.விபி அவர்களில் இருந்து பிரிந்தே
இருந்தான்.திருவிதாங்கூர் சமஸ்தானம் பிரிட்டிசாரின் கீழ் செயல்படும் ஒர் குறு சமஸ்தானம்.அந்த பிரம்மாண்ட சமஸ்தானத்தில் விபிக்கு துணை அவன்
தாயே.அவன் தாயின் மடியே அவன் உலகம்.வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.தெருவெல்லாம் பெண்கள் மாராப்பு
இன்றி மார்பை மறைக்காமல் தெருவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.பல ஆண்கள் சட்டையின்றி முகத்தில் மீசை தாடி இல்லாமல் தேங்காய்
ஓட்டை கவுத்தார்ப் போல் தலை மயிரை வைத்திருந்தனர்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டே விபியின் கால்கள் சமஸ்தானத்தை நோக்கி
விரைந்தன.

காதல் மலர்ந்தது:

                       “பறவைகளும் மனிதர்களும் ஒரு சேர வேலை செல்லும் நேரம் கதிரவன் துயிலெழுந்து உயிர்களை எழுப்பிய நேரம்
இலைகளிலும் புற்களிலும் பனிபடர  பூக்கள் பூத்த நேரம் படுக்கையில் பல் துலக்கா இதழ்கள் ஓன்றையொன்று சுவைத்துக்கொள்ளும் காலை நேரத்தில்”
 வேதாகியின் வீட்டின் வெளியே சத்தம்  “ஏ என்னடி பண்ற நேரமாச்சு வெறசா வா” என நாங்கிலிவீட்டின் வெளியே நின்றுக்கொண்டு வேதாகியை
அவசரப்படுத்தினாள். “இதோ வந்துட்டேன்க்கா” என்று வெளியே வந்தாள் நாவற் பழ நிற உதட்டை உடைய வேதாகி
“ஏன்டி வெறசா கிளம்பி வர தெரியாதாடி உன்னால எப்பவும் மீசைக்காரன் கிட்ட உன்னால திட்டு வாங்கவேண்டியிருக்கு”
“என்னக்கா பண்ண சொல்ற காலைல எழுந்து தோட்டத்துக்கு போயி மீசைக்காரன்கிட்ட திட்டு வாங்கி தேங்காயை உரிச்சு போட்டு அத
வண்டில ஏத்தி பொருக்கி பசங்ககிட்ட இருந்து தப்பிச்சு உன்னோட மாமாவோட கொஞ்சல்லாம் பாத்துட்டு மறுபடியும் மண்டிலயே
மத்தியம்பூறா உக்காந்துட்டு அந்த சிரிக்கக பேச்சயெல்லாம் சமாளிச்சுட்டு வீட்டுக்கு வந்தா அம்மா அடுத்த வீட்டுக்கு வாக்கப்படப் போறவ
இன்னும் சமைக்க தெரியல உனக்கு மாமானுக வேற இல்ல நீயெல்லாம் எப்படி பொழப்பு நடத்தப்போறீயோன்னு கேட்க என்னை
தேடி இராஜ குமாரன்லாம் வருவான்னு நா சொல்ல ம் வருவான் வருவான்னு அம்மா சொல்ல”
“ம் போதும் போதும் நிறுத்துடி வாயாடி வா போலாம்”என நாங்கிலி  கூறினாள.;         
தென்னை தோட்டத்தில்:
         நாங்கிலி வேதாகியை விட்டு சிறிது தூரம் தள்ளி தேங்காய்களை அள்ளி போட்டுக்கொண்டிருந்தாள்.வேதாகி தன் பிராயத்து
 பெண்களுடன் வேலை செய்துக்கொண்டிருந்தாள்.விபியும் அவனது சகோக்களும் மண்டியை சுற்றிக்கொண்டிருந்தனர்.வேதாகி வேலை செய்து
கொண்டிருந்த இடத்திற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தான்.கதிரவனும் நிலவும் சந்தித்தாற்போன்று வேதாகியின் கடைவிழி விபியின் கண்களை
சந்தித்தது விபி சட்டென தரையை பார்த்தான் வேதாகியும் சட்டென திரும்பிக்கொண்டாள்.விபிக்குள் ஏதோவொரு மாற்றம் வயிற்றில் புயல்
அடித்தாற்போன்று ஓர் உணர்வு அவன் கண்கள் அவனையே அறியாமல் அவளை தேடியது.அவளை பார்க்க அவன் கண்கள் ஏங்க அவன்
அவளை பார்க்க தொடங்கினான்.வேதாகி அருகில் இருந்தவள் அவள் காதில் “அந்த கொடூரன் உன்ன பாத்துட்ருக்கறான் பாத்து” என்றாள்.
தப்பி தவறி பாத்து தொலைச்சுட்டமோ என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.வேதாகியின் கைகள் அவள் மாராப்பை மறைத்தது அவள்
மாராப்பு இன்றி தவிப்பதை அவன் கண்களால் பார்க்க முடியவில்லை அவன் கால்கள் அவளை நாட துடித்தன அவன் உதடுகள் அவளுடன்
பேச துடித்தன.விபி வேதாவின் அருகில் சென்றான் அவனையே அறியாமல் அதை கண்ட மற்றோர் வேதாவைவிட்டு விலகி சென்றனர் விபி
அருகே வரவர அவள் மனதில் எண்ண ஓட்டங்கள் நாம இந்த கொடூரன் கைல மாட்றக்கு நாமலே இறப்பை தேடிக்கலாமே ஆனா நம்ம
இறப்பு நம்ம கைல இல்லயே அதுவும் கொடூரமால்ல இருக்கும் என்று அவள் நினைப்பதற்குள் அவன் அருகே வந்துவிட்டான் அவன்
கைகள் அவள் மாராப்பு அருகே சென்றது அவள் கண்களை பொத்திக்கொண்டாள்.விபி வேதாவின் மாராப்பை மூடிவிட்டு “நீ ரொம்ப
அழகா இருக்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.
இது காதலா?:
          “ஏ சீக்கீரம் சாப்டுவுடுடீ” என வேதாகியின் தாய் சத்தமிட்டாள்
“ஆ… பசியில்ல நா சாப்பிடல” “என்னதா பசியில்லயோ வேலைக்கு போறவளுக்கு”.வேதா மனதிற்குள் எதுக்கு அவன் வந்தான் எதுக்கு
அப்படி பண்ணனும் நா அழகா இருக்கனா “அம்மா நா அழகா இருக்கனா” “உனக்கு என்னடி குறைச்சல் மகாராணி கணக்கா இருக்க”
“பொய் சொல்லாதம்மா”.எல்லாரும் நம்மல கருமி கருமின்னுதானே சொல்லுவாங்க இவன் இப்படி சொல்றான் என சுவரோரம் சாய்ந்துக்
கொண்டு சிந்தித்து கொண்டிருந்தாள் தூங்காமல் இரவை கழித்தாள் இரா முழுதும் விபியின் நினைப்பு அவளுக்கு.
பிறப்பெடுத்த இடத்தில் தலை வைத்து படுத்திருந்தான் விபி தாயின் மடியில் அவ அவ்ளோ அழகில்ல ஆனா நம்ம கண்ணுக்கு மட்டும்
அத்தன அழகா தெரியறா நம்ம அம்மாவைவிட அழகா தெரியறா “அம்மா உனக்கு அப்பாவை பிடிக்குமா?” “அந்த கேள்விலாம் 
உனக்கு எதுக்குடா”என அதட்டினாள் விபியின் தாய். “சரி ஏ மடியில படுத்தது போதும் இன்னொருத்தி மடியில எப்ப படுக்கப்போற”
“இப்படியெல்லாம் நீ பேசுனா எழுந்து போயிருவம்மா” என கூறினான் விபி.என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நம்ம உடல்ல
ஊள்ளத்துல புதிதாய் ஓர் மாற்றம் அம்மா சொன்ன கதைகள்ல வர மாதிரியே நமக்கு ஆகுதே இதுதான் காதலோ என சிந்தித்தான்
விபி.

விபியும் வேதாவும்:

                       காலை விடியலை எண்ணி விபியின் மனம் அலைந்தது மரங்களினூடே கதிர்களை பரப்பி வீடுகளின்
வாசலை எட்டி பார்க்கும் பெண் போன்று அங்கங்களால் ஜொலிக்கும் செந்நிற வேந்தனை எதிர் நோக்கி விபியின் கண்கள் அலைந்தது
விடிந்ததும் அவன் கால்கள் தோட்டத்தை நோக்கியே நகர்ந்தது அங்கே வேதாகி பலருடன் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாள் அவன்
கண்கள் வேதாவை பார்க்க வேதாவின் கண்களும் விபியின் பார்வையும் ஓன்றையொன்று சீண்டின்.விபி வேதாவையே பார்த்துக்
கொண்டிருந்தான் யாரும் பார்க்காதவாறு தொலைவில் இருந்துக்கொண்டு விபி தன்னை பார்பதை அறிந்து வேதாவிற்கு ஓரே
மகிழ்ச்சி உள்ளுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறந்தது மதியம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை நேரம் வேகமாக ஓடியது
அனைவரும் சாப்பிட சென்றபோது தீடீரென வேதா விபி பார்வையில் இருந்து தப்பினாள்.சுற்றும் முற்றும் பார்த்தான் பின்னாலிருந்து
ஓர் குரல் “என்ன ஏ அப்படி பாக்குறீங்க” விபி திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் பின்னால் வேதா “ஏ ஏன் இப்படி பயமுறுத்தற”
“இல்ல நீங்க ரொம்ப நேரம் என்னையே பாத்துட்டிருந்தீங்க உங்கள பாத்தா நல்லவரா தெரிஞ்சீங்க அதா………”
“நா அவ்ளோ நல்லவன் கிடையாது உன்ன பாத்தா பேசனும்னு தோணுச்சு அத்தா பாத்த வா அங்க போயி பேசலாம்”
“ம்… சொல்லுங்க”
“நா விபி நீ…. நீ ரொம்ப தைரியமானவ |போல முதல்ல அத மற”
அவள் அவசர அவசரமாக தனது மாராப்பை மறைத்தாள் இருவரும் நடந்துக்கொண்டே பேசினர்.
“நா வேதாகி துணிச்சல் இல்லாம இங்க வந்து பேச முடியுமா”
விபி நெளிந்துக்கொண்டே பேசினான் இதுவரை ஓர் பெண்ணிடம் பேசியது இல்லை அல்லவா இதை கவனித்த வேதாகி
“ஏ கூச்சப்படுறீங்க இராசா பையனா இருந்துட்டு”
“எங்கம்மாவை தவர நா யார்கூடயும் நா அதிகமா பேசமாட்டேன்”
“அதுக்காக இவ்ளோ கூச்சமா”
“இனிமே பழகிக்கிறேன்”
“இனிமேவா நாம எவ்ளோ நேரம் இப்படி பேசப்போறோம்”
“ம்… வாழ்க்கை பூறா”
வேதா விபியை தன் கடைக்கண்களால் ஓரு பார்வை பார்த்தாள் அது விபியை எறித்துவிடும் போன்று இருந்தது வேதா சிறிது சிறிதாக
கால்களை பின்னோக்கி எடுத்து வைத்தாள் பின் ஓட ஆரம்பித்தாள்.
இரு மலர்கள்:
                   வேதா தனது படுக்கையில் படுத்துக்கொண்டு இது சாத்தியமா வாழ்க்கைப்பூறா விபிக்கூட போக முடியுமா
என சிந்தித்து கொண்டிருந்தாள்.தப்பா சொல்லிட்டமோ வேதாகிட்ட அப்படி சொன்னது சரியா நாம வாயிலிருந்து எப்படி அந்த
மாறி வார்த்தை வந்துச்சு வேதா பேர் நல்லதா இருக்கு அவ கூட பேசிக்கிட்டே இருக்கனும்னு தோணுது கண்டிப்பா காலைல
அவ கிட்ட பேசுனும் என விபி யோசித்து கொண்டிருந்தான்.பச்சை வண்ண சூரியன் போன்று கைகளை விரித்து கதிரவன் ஓளியை
உடலின் நடுவே செல்லவிட்டு வேற்றூர் வரை குழாய் எடுத்து சென்று நீர் தரும் தென்னை மரங்களையுடைய தோட்டத்தில்
வேதா விபியை பார்த்தாள் வேதாவின் அருகே விபி சென்றான் யாருமில்லா சமயத்தில் வேதா தயங்கினாள் பின்; அவளே
சென்று பேசினாள் “நீங்க சொன்னத எல்லாம் யோசிச்ச பரவால்ல நல்லா இருக்கு” என்றாள் விபிக்கு  அவ்ளோதான்
உடலெல்லாம் சிலிர்த்தது.இருவரும் பேசினர் தினமும் பேசினர் யாருக்கும் தெரியாமல் பேசினர் உலகை மறந்து பேசினர்.
இரு மலர்கள் இணைந்தது.

அரசாங்க கொள்கை:

              “எம் மக்கள் எங்கே எம் மக்கள் எங்கே பார்வாத்தியாரே” என ஆவேசத்துடன்
சபையின் உள்ளே வந்தார் வைகுந்தர். “என்ன அங்க சத்தம் பார்வாத்தியாரே” என நுழைந்தார் அரசன் கருநீசன் “ஓன்றுமில்லை
அரசே ராபர்ட் பிரபு கேட்டதற்கு இணங்க வீரர்களை கடல் தாண்டி அனுப்பினோம் அல்லவா அது குறித்து கேட்கிறார்”.
என பதிலளித்தார் பார்வாத்தியார். “வைகுந்தரே கவலை வேண்டாம் உம்மக்கள் திரும்பி விடுவர்” என்றார் கருநீசன். “நீர் நமது
சமஸ்தானத்திற்காகவா போரிட்டீர் நீர் அடிமையாய் இருக்கும் இடத்தில் எங்களை அடிமையாக்க நினைக்கிறீரா?” என கேட்டார்
வைகுந்தர் “நீங்கள் எல்லோரும் என் அடிமை என்பதை மறந்துவிடாதீர் அதுமட்டுமன்றி நமது சமஸ்தானம் இல்லை எமது
சமஸ்தானம்”
“ஆடாதீர் நீயே பிரிட்டிசாரின் அடிமைதான் எங்கள் வரி மூலம் உன் கடனை கட்டிக்கொண்டிருக்கிறாய் என்பதை மறந்துவிடாதே நீசா
நாங்கள் மீசை வளர்க்க உனக்கென் வரி கட்ட வேண்டும் எம் பெண்டீர் மார்பை மறைக்க உனக்கென் வரி கட்ட வேண்டும் நம்மை
யாரும் எதிர்க்கவில்லை வெள்ளை இராஜ்யத்துக்கு உதவத்தான் நம் வீரர்களுக்கு நீ பயிற்சி அளிக்கிறாய்”
“போதும் நிறுத்து”
“நீ நிறுத்து அனைவரும் ஓர் குலம் என்றிருந்த இந்த நாட்டில் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என நம்மை பிரித்தது யார் என்று
யோசி உனக்கு அடிமைகள் இருந்தால்தான் நீ தலைவன் ஆக முடியும் என்று யார் கூறியது”
“இதுவே இயற்கை நியதி”
“இயற்கை நியதி அல்ல வெள்ளை இராஜ்யத்தின் சதி”
“வரி கட்டினால்தான் நாம் உயர முடியும்”
“இவ்வாறு சொல்லி உன்னை அவர்கள் ஏமாற்றினார்கள் நீ எங்களை ஏமாற்றுகிறாய் வரி கட்டினால் உயர்வது நாட்டில் வாழ்பவர்கள்
அல்ல நாட்டை ஆள்பவர்கள்”
“நான் உயரவில்லையே”
“நீ ஆள்பவனில்லையே”
“உனக்கு தேவை உன் மக்கள் தானே இன்னும் இரண்டு மாதத்தில் நாடு திரும்புவர் போ”
“திரும்பவில்லை எனில் புரட்சி வெடிக்கும் உன்னை அடிமை பதவியிலிருந்து  விடுவிப்பேன்”என கூறி வைகுந்தர் விடைப்பெற்றார்.
பார்வாத்தியார் “அமைதி வேண்டின் போருக்கு வீரர்களை அனுப்ப அவர்கள் கேட்கிறார்கள் இவர் தெரியாமல் பேசுகிறான்” என கூறினார்
“அதுவேஇ அரசாங்க கொள்கை”

மலரே மலரே:

                 “எங்கம்மா ஏ மடியில படுத்தது போதும் இன்னொருத்தி மடியில எப்ப படுக்கப்போறன்னு கேட்டாங்க ஆனா
ஊன் மடியில படுப்பன்னு நெனைச்சே பாக்கல”என வேதா மடியில் கிணற்றோரமாக படுத்துக்கொண்டு விபி  கேட்டான.;
“ஏன்…….” என அதிகார தோரணையில் கேட்டாள் வேதா
“நீதான் பெண்ணேயில்லயே”
“உன்ன………” என வேதா விபியின் நெஞ்சில் பாசமாக குத்தினாள்.விபி வேதாவை கட்டியனைத்தான் வேதா மறுபடியும் தனது
இடது கையால் விபியின் நெஞ்சை குத்தினாள். “இதல்லாம் சரிப்பட்டு வருமா?” என சோகமாக கேட்டாள் வேதா
“ஏ எவர் எதிர்த்தாலும் என் இறுதி மூச்சு வரை உன்கூடதா என் வாழ்க்கை ஏ உனக்கு தெரியுமா எனக்கு இந்த உலகத்துல புடிச்சவங்க
இரண்டே பேர்தா ஓண்ணு எங்க அம்மா அப்பறம் அப்பறம்” என வேதாவின் தாடையை பிடித்து “நீதான்……” என்றான் விபி
“சரி நானே அழகில்ல என்கிட்ட உனக்கு என்ன பிடிக்கும்”
“தெரியல….. ஆனா என்ன பாத்துன்ன நீ உ மாராப்பை மறைக்கறதும் சட்டுனு ஊ வேர்வைய துடைக்கறதும் ஊ கருப்பு எல்லாம்
புடிச்சுருக்கு ஆனா இதல்லாம் எனக்கே தப்பா தெரியுது”
“அம்மாகிட்ட சொல்லலாம்ல” திடீரென விபி வேதா மடியில் இருந்து எழுந்து “இதுதா நாம காதலர்களா முதலும் கடைசியுமாய்
இனிமே நாமே மணமேடையிலதா சந்திக்கனும் நா அம்மாகிட்ட பேசுற”
“அம்மா சரி ராஜா”
“அவர் ஓத்துக்கலனா நாம எங்க மாமா கோயமுத்தூர்ல இருக்காரு அங்க போயி விவசாயம் பாத்து உன்ன காப்பத்துறன் எனக்கு
உன்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா வேதா உன்ன விட்றமாட்டன்டீ”
“சரி கடைசியா என்ன கடலுக்கு மட்டும் கூட்டிட்டு போங்க”
“ச்சேரி” என்று கூறி வேதாவின் கழுத்தில் ஓர் அழகிய தங்க சங்கிலியை மாட்டினான் விபி வேதா கழுத்தை தொட்டு
பார்த்துவிட்டு விபியை பார்க்க விபி புன்னகையை பூத்தான்.

கடலே கடலே :

                     “ஏங்க கரையில யாருமே இல்ல”
“ஆ உன்ன எப்படி எல்லார் இருக்கற இடத்துக்கு எப்படி கூட்டிட்டு வரது இங்கதா யாரும் வர மாட்டாங்க”
இருவரும் கடற்கரையில் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.அலைகள் இவர்களை தொந்தரவு செய்ய கூடாது என எண்ணியோ
ஓய்ந்திருந்தது. “அம்மா என்ன சொன்னாங்க” என சோகத்தொனியில் கேட்டாள் வேதா. “சொன்னே பக்கத்து சமஸ்தானத்துல பெண்
எனக்கு பாக்கறாங்க” என விபி கூறிவிட்டு திரும்பி பார்க்கும்பொழுது வேதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது “ஏ அப்பா
அப்படித்தான் நா உன்ன விடுவனா” என விபி வேதாவை சமாதானப்படுத்தினான்.வேதா சிரித்துக்கொண்டே சொன்னாள்
“நம் முதற்பார்வையில் அங்கத்துடன் உரையாடுவாய் என்று நான் நினைக்க ஆத்மாவுடன் உரையாடிச் சென்றாய் மற்றவங்களுடன்
பேசி சலித்ததால் என்னவோ உனை பார்த்தால் நா எழ மாட்டேங்குது என் கண்கள் விடியறப்ப வர சூரியன் மாறி கீழே பாக்குது
என் பெண்மை என்னை கொள்ளுது உன்னால் காலம்பூறா உன் விழிப்பார்வை போதும் இந்த உனக்கு”
“ஏ வாயாடி பெரிய மனு~pயாட்ட நாயம்பேசுற” எனக்கூறி வேதாவை துரத்த வேதாவும் ஓட ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து
இருவரும் அமைதியானார்கள் அலைகளை ரசித்துக்கொண்டு அவர்களுக்காகவே அலைகள் எழுந்தது போலும் அமைதியாக கடற்கரை
மணலில் சூரிய மறைவை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். “ஏங்க நா இப்ப செத்துட்டா என்ன செய்வீங்க” என வேதா விபியிடம்
கேட்;க “நானும் செத்துருவன்” என விபி கூறினான்.
வேதாவும் நாங்கிலியும்:
                       “அக்கா நீங்க எப்ப மாமாவை பாத்தீங்க” என நாங்கிலியிடம் வேதாகி கேட்டாள்
“அன்னைக்கு ஓரு நாள் நம்ம வீட்டுக்கு மாமா வந்தாரு அப்ப தெரியாது அவர் எனக்கு முறை மாமா வேணும்னு பாத்த உடனே அவர
எனக்கு பிடிச்சிருந்தது ரொம்ப நாள் அவர் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு இருந்தாரு அவர பாக்க பாக்க அவரு மேல ஆசை ரொம்ப
அதிகமாச்சு அவருக்கும் அப்படித்தான் போல தீடீர்னு ஓர் நாள் வந்து என்னை கட்டிக்கறீயான்னு கேட்டுட்டாரு எனக்கு தரையில
இருக்கனா ஆகாசத்துல இருந்தனான்னு எனக்கே தெரியல அப்படியே போனவதா ஆனா என்ன குழந்தையில்ல அதுதா குறை”
“இப்பல்லாம் ஏன்க்கா சோகமாவே இருக்கீங்க மாமா இல்லாததாலியா”
“ஆமான்டீ வேணா வேணான்னு சொன்ன கேட்காம போருக்கு போனாரு இன்னும் திரும்பல அதா வைகுந்தர் ஐயா திருப்ப
முயற்சி பண்ணிட்டு இருக்காரு”
“அக்கா உங்ககிட்ட ஓன்னு சொல்லனும்”
“என்ன சொல்லுடி”
“அக்கா……”
“ஏ நீயும் யார்கிட்டயோ மாட்டிக்கிட்டயா…….” என கூறி வேதாவின் இடுப்பை கிள்ளினாள் நாங்கிலி வேதா உள்ளுக்குள்
நகைப்பதை போல் நகைக்க “ஏ யார் அவன்”  “அக்கா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க”
“சொல்லமாட்டன்டீ அவனும் உன்ன ம்ம்ம்ம்…..”
“ம் அப்ப சொல்லு”
“விபி ராஜா பையன்”
நாங்கிலி அதிர்ச்சி கலந்த பார்வையில் வேதாவை பார்த்தாள் “ஏ எப்டிடீ”என கேட்டாள் நாங்கிலி.
“சொல்லனும்னு தோணுச்சு க்கா அதா”
“சரிடீ உனக்கு என்ன உதவினாலும் நா பண்ற”
“ஏ வாங்கடீ” என உடன் பணி செய்பவள் அழைத்தாள் “என்னடி ரெண்டு பெரிய மனுஷிக ரகசியம் பேசறீங்க” என
கேட்டாள் அவள்.அதற்கு வேதா “நா குழந்தக்கா..” “தெரியுது ரெண்டு வெளிய வந்து தொங்கும்போதே” என அவள்
கூறியவுடன் உடனிருந்தவர்கள் சிரித்தனர்.

வாரிசு:

           “அப்பா எனக்கு கல்யாணம் வேண்டா நா ஏற்கனவே ஓரு பெண்ணை விரும்புறேன்”என தந்தை நீசனிடம்
கேட்டான் விபி“அந்த பெண்ணை நீ மணமுடித்தால் உனக்கு போட்டியே இல்லாம ஓரு சமஸ்தானம் கிடைக்கும் எவளோ ஓரு
ஏழை பெண்ணிற்காக அதை இழந்துவிடாதே”
“உங்களை போன்ற அடிமை ஆட்சி எனக்கு வேண்டாம் எனக்கு அவளே போதும்”
“தலைவனின் மகன் தாழ்ந்தவளை மணக்கலாமா மகனே”
“தலைவனா மக்களை ஓன்றுக்கூட்டுபவனே தலைவன் மக்களை பிரித்தாள்பவனில்லை”
“இப்பொழுது நாட்டில் இக்கட்டான நிலை இருக்கிறது நீ உன் மாமாவின் கோட்டைக்கு போ”
“நான் அவளை திருமணம் செய்தே தீர்வேன்”
“நான் உன்னை கவனிக்கனும்னு இல்ல நம்ம சமஸ்தானத்தில் பல பிரச்சனை போய்ட்டு இருக்கு அத கவனிக்கவா”
“நீங்கள் சமஸ்தானத்தை கவனியுங்கள்  என் வாழ்க்கையை நானே கவனித்துக்கொள்கிறேன்”என கூறிக்கொண்டு
கோபத்துடன் வெளியே வந்தான் விபி.எதிரே அவனது தாய் வந்தார் “வணங்குகிறேன் தாயே” என்றான் விபி
“நீ நல்ல முடிவுத்தான் எடுத்துள்ளாய் மகனே”
“தெரியும்மா”
“உனக்கு பிடிச்சத நீ செய்”
“நன்றி அம்மா”என கூறி விடைப்பெற்றான் விபி.

புரட்சி:

         ஓர் மாலை வேளையில் வைகுந்தர் மக்களை ஊரின் நடுவே அழைத்திருந்தார் ஊர் மொத்தத்தையும் வைகுந்தர் கூட்டி
 பேச தொடங்கினார் “நம் மக்களை போருக்கு என்று அழைத்து சென்றார்கள்அல்லவா அவர்களுக்கு ஓர் சோகமான செய்தி” என்று
 சோகத்தொனியில் சொன்னார் பின் “இறப்பு ஏற்பட்டது” என்று கூட்டத்தைநோக்கி உரக்க கூறினார். “என் மகன் நலமா ?” என ஓர்
 தாய் கேட்டாள். “என் தந்தை நலமா?” என ஓருவன் கேட்டான்.“என் கணவன் நலமா?” என நாங்கிலியும் கேட்டாள் அதற்கு
வைகுந்தர் “சென்ற ஐம்பத்தி ஆறு பேரும்” என்று நிறுத்தி சிறிது இடைவேளை விட்டு “இறந்துவிட்டனர்” என்று கூற கூட்டத்தில்
ஓரே பெண்கள் தங்கள் மார்பை அடித்துக்கொண்டு அழுதனர் தந்தையையும் சகோதரரையும் இழந்த ஆண்கள் மண்டியிட்டு அழ
தொடங்கினர் இருநூறு பேருக்கு மேல் குழுமியிருந்த அந்த இடத்தில் எங்கும் அழுகுரலே இடிஇடித்து மழை பெய்து மண்ணை
ஈரமாக்கும் ஆனால் இங்கு மனிதர்கள் கதறி கண்ணீர் விட்டு மண்ணை ஈரமாக்கினர். “ஏன் அழுகிறீர் இழந்ததை எண்ணியா
இழந்ததற்கு அழுதால் இன்னும் எவ்வளவு கண்ணீர் தேவை இனிமேல் இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதை
யோசிப்போம் இனியும் நாம் அடிமையாக இருக்க முடியாது நாம் வரி கட்டிவிட்டோம் அதிகமாக வரி கட்டிவிட்டோம் அனி நாம்
சுதந்திரமாக மீசை வளர்க்கலாம் பெண்கள் மார்பை மறைக்கலாம் உணவு உட்கொள்ளலாம்”
“எப்படி?” என கூட்டத்தில் இருப்பவர்கள் கேட்டனர்.
“நாம் சிகரத்தில் இருக்கிறோம் நம்மால் வானத்தை தொடமுடியாதா படகுகள் கையில் வைத்துக்கொண்டு கடலை ஆட்சி
செய்ய முடியாதா”என ஆவேசமாக பேசினார் வைகுந்தர். மக்களை நோக்கி “அவர்கள் என்ன வைத்தாலும் அதுதான் சட்டம்
என்றால் நாளை நாங்கள் சொல்லும்போது இறந்துவிட வேண்டும் என சட்டம் போட்டாலும் போடுவர்  ஓர் நாள் வெள்ளிக்கு
மதிப்பென்றனர் பின் தங்கத்திற்கு மதிப்பென்றனர் இப்போது காகிதத்திற்கு மதிப்பென்கின்றனர் அவர்கள் எதற்கு மதிப்பு
என்கிறார்களோ அதற்கே மதிப்பு என்றால் நாம் யார்?” என்று கூறி மூச்சை உள்ளிழுத்து “இனி நாம் வரி கட்ட கூடாது
அவர்கள் போட்ட சட்டங்களை நாம் மதிக்ககூடாது வரி கட்டாதீர்”
“நம்மை கொன்றுவிட்டால்?”
“புரட்சியாளன் இரத்ததிற்கு பயப்படலாமா நாங்கிலி நீதான் துணிச்சல் மிக்கவள் வெள்ளை ராஜ்யத்தையே பயம்
கொள்ள வைத்த வீர பெண்மணி பெயரில் அமையப்பெறும் ஜான்சி இராணி படைக்கு நீயே தலமை ஏற்றுக்கொள்”
என கூறி மக்களுக்கு ஆணையிட்;டார்.

வெயிலை வென்ற வெப்பம்:

                        கூற வார்த்தையில்லை என்பதை விட அங்கே எதுவுமில்லை அது ஓர் அங்காங்கே
நட்டு நின்ற பனை மரம் நிறைந்த பொட்டல் காடு வெயில் வேறு கொளுத்தி எடுத்தது அங்கே நடந்து கொண்ருக்கும் போது
மேலே பார்த்தால் வண்ணங்கள் பல கண் முன்னே தெரியும் சோர்வாய் இருக்கிறதே என்று சிறிது அமர்ந்தால் வெள்ளை
அணுக்கள் கண் முன்னே தெரியும் அங்கே விபியும் வேதாகியும் ஓருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்
“இப்படியே இருந்தா எப்படி எதுக்கு கூப்டீங்க” என கேட்டாள் வேதாகி
“ம்… நீ ஓரு பொண்ணானு பாக்கதா கூப்ட…”
“ச்ச்சீ ஏன்  எப்ப பாத்தாலும் இதே கேள்வி”
“கேக்ககூடாதா போ நா எதுவும் பேசல”
வேதா விபியின் கையை பிடித்து “வெளையாட்டாய் கூட என்னை ஓதுக்காதே விதி நம்மள ஓதுக்கிருமோன்னு பயம்
எனக்கு” என்றாள்.
“ஏ என்ன மன்னிச்சுரு உனக்கு ஓண்ணு சொல்லவா ஏ இதயத்தில் நீ இருக்கிறாய் என்பதை விட என் இதயமாகவே
நீ இருக்க அவ்ளோ சுலபமா உன்ன விட்றமாட்டேன்”
“விபி நா ஏங்கறன் வாழ்வின் ஓவ்வொரு நொடியும் உன்கூட இருக்காதன்னு நினைச்சு ஆனா அதே சமயம் நா
சுந்தோசப்படறேன் உன்கூட வாழ்ந்த ஓவ்வொரு நொடியும் நினைச்சு”
இருவரும் ஓருவரையொருவர் கண்களால் காதல் செய்து கொண்டிருந்தனர் இருவர் கை விரல்களும் ஓன்றையொன்று
நெருங்கியது வெப்பம் நிறைந்த விபியின் விரல்களின் உ~;ணம் தாங்காமல் வேதா கையை எடுத்தாள் வேதா குறுகி
அமர விபி வேதாவை இடையோடு சேர்த்து கட்டியணைத்தான் பூத்து குலுங்கிய வேதாவின் அங்கங்களை தொட்டான்
விபியின் உஷ்ணத்தால் வேதா சிலாகித்தாள் கிளர்ச்சி அடைந்தாள் இதழ்கள் இரண்டும் இணைய இருவரையும்
வெப்பம் ஆட்கொண்டது இதழ்கள் மட்டுமல்ல இருவரும் இணைந்தனர் அங்கு எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லை
மலர்கள் இணைந்தது இயற்கை வென்றது வெயிலையும் வென்றது அவர்கள் வெப்பம்
 கொஞ்சி கழித்தவுடன் திடுக்கிட்டு எழுந்தான் விபி. இருவரும் தங்களது
உடைகளை சரிசெய்து கொண்டனர். அங்கு பெரு அமைதி ஆட்கொண்டது வெப்ப காற்றின் சத்தம் மட்டுமே
கேட்டது அமைதியை கலைக்கும் விதமாக விபி கண்களில் கண்ணீர் உடன் “தவறிழைத்துவிட்டேன்” என கதறி
அழ தொடங்கினான் “வைகுந்தர் பார்வாத்தியார் என் தாய் கற்பித்த தர்மத்தை நான் மீறிவிட்டேன் அவர்களுக்கு
துரோகம் இழைத்துவிட்டேன் அஃது பெரும் பாவமல்லவா?” என கூறி அழுதான். அவன் தோள்களில் மலர் போன்ற
கரத்தை வைத்து “விபி இதுவே இயற்கை ஆணும் பெண்ணும் சஞ்சலப்படுவது இயற்கை அதன் விளைவுகள்
தவறொன்றுமில்லை இதுவே இயற்கை நியதி”
“பெரிய மனிதர்களிடம் தர்மத்தை கற்ற என் மனம் சலனப்படலாமா?”
“விபி சலனப்பட்டால்தான் அது மனம் மனம் இருந்தால்தான் அவன் மனிதன்  நான் உனக்கானவள்; நாம்
இணைந்ததில் தவறில்லை”
“நீ என்ன கூறினாலும் சரி நான் செய்தது தவறே என் மனம் என்னை கொள்கிறது வாழ்க்கையில் நான் செய்த
மிகப்பெரிய தவறு இது இதை நானே திருத்தி கொள்ள வேண்டும் இன்னும் இரு வாரங்களில் நமது திருமணம்
நாம் மனதால்இஉடலால் இணைந்தோம் இனி ஊரை கூட்டி மக்கள் கண் முன்னே இணைய வேண்டும் நாளை
மறுநாள் நான் உன்னை சந்திக்க தாயிடம் சம்மதம் பெற வருவேன்”என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு
எழுந்து சென்றான் விபி. சிறிது நேரம் கழித்து வேதாவும் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து வீட்டுக்கு
கிளம்பினாள் வழியில் ஓரு சத்தம் ஓரு பெண்மணி இவளை நோக்கி ஓடி வந்து “உங்க அம்மா ஆம்பளங்க
போற கிணத்து வேலைக்கு போயி தவறிட்டா” என சோகம் கலந்த குரலில் கத்தி கூறினாள்.

மலர்கள் உதிர்ந்தது:

                        மக்கள் அனைவரும் வரி கட்டாமல் புரட்சி செய்கிறார்கள் என்று கேள்விப்பட்ட
அரசன் கருநீசன் மக்களுக்கு பயத்தை பரிசளிக்கும் பொருட்டு; ஓர் ஆணையை பிறப்பித்தார் அதாவது வரி கட்டாத
ஆண்களை கழுவேற்றவும் பெண்களை மானபங்கபடுத்தவும் ஆணையிட்டார்.ஊரின் நடுவே பரையை அடித்து கொண்டு
ஓருவன் “ ஆயம்மாரே……இதனால ஊர் ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னன்னா வரி வசூலிக்க பார்வாத்தியார் வந்து
கொண்டிருக்கிறார் வரி கட்டாதவங்க கற்புக்கும் உயிருக்கும் சமஸ்தானம் பொறுப்பேற்காது ஆயம்மாரே…….” என்றான்
பார்வாத்தியார் மேல் மக்கள் மனதில் மரியாதை இருப்பதால் அவரை எதிர்க்கமாட்டர் என்ற நோக்கில் அவரை
அனுப்பினார் கருநீசன்.முதலில் ஓர் வீட்டின் வாசலுக்கு பார்வாத்தியார் இரு வீரர்களோடு சென்றார். அதில் ஓர்
வீரன் “அய்யாமாரே அம்மாமாரே தாயி வீட்டு பெரிய மனுசங்க ஆயம் கேக்க வந்துருக்;கோம் சாமி…..
வெளிய வா சாமி….” ஓரு கணவனும் மனைவியும் வெளியே வந்தனர் கணவன் “நாங்க ஆயம் கர்ணம் எதுவும்
கட்ட மாட்டோம் சாமி” என்றான்.அதில் ஓரு வீரன் தனது கையில் வைத்திருந்த கம்பால் அவனை ஓங்கி
அடித்தான் அவன் கீழே விழுந்தான் மறு அடி அடிக்க அவன் கம்பை ஓங்கினான் பார்வாத்தியார் வீரனை
தடுத்தார் “கட்டிவிடு….” என்றார். “பார்வாத்தியாரே” என்றான் அவன் மனைவி சில செப்பு நாணயங்களை
 எடுத்து வந்து தந்தாள்.
வேதாகி வீட்டின் பின்புறம்
“ஏ அழாதே நான் உன்ன நல்லா பாத்துப்பேன்னு அம்மா நம்பனாங்க போல அதா சாமிகிட்ட போய்ட்டங்க
அவங்க உனக்காகத்தானே வாழ்ந்தாங்க நீ அழுதா அவங்களுக்கு பிடிக்காதில்ல” என வேதாவை
சமாதனப்படுத்தி கொண்டிருந்தான் விபி. “அழுதா பிடிக்காதுன்னு தெரியுமில்ல அப்ப ஏ இப்படி பண்ணுச்சு”
என அழுதாள் வேதாகி. “சரி அழாத” என்று வேதாவை கட்டிக்கொண்டான் விபி “என்ன எப்ப வந்து நீ
கூட்டிக்கிட்டு போ போற என்ன நீ ஏமாத்திருவ போல” என அழுதுக்கொண்டே கேட்டாள் வேதாகி.
“ஏ நா மேலே இருக்கேன் உனக்காக கீழ வருவன் நா அரசனானலும் எனக்கு நீ மட்டும்தா அரசி
என் ஆண்மையை ஆட்சி செய்தவள் நீ உன் பெண்மையை ஆட்சி செய்ய சிறிது நேரம் தருவாயா”
என்று வேதாவை அணைக்க செல்ல வேதா விபியை தள்ளிவிட்டு “ம் போதும் நீங்க ஏற்கனெவே ஆட்சி
செய்ஞ்சது கண்டிப்பா என்ன நீங்க முழுமையடைய வப்பீங்கன்னு நினைக்கிற”
“ம்… புரியல.:”
“ஆ நா உங்கள அப்பா ஆக்கிருவன்னு நினைக்கற”
“சரி நம்ம கண்டிப்பா ரண்டு நாள்ல பொள்ளாச்சி போறோம் அங்க போயி புது வாழ்க்கைய ஆரம்பிப்போம்”
“சரி நீங்க இப்ப போங்க இங்க ரொம்ப பிரச்சனையா இருக்கு”
“பார்வாத்தியார்க்கு நம்ம காதல் தெரியும் அவர் இங்க வரமாட்டாரு பயப்படாத”
ஊரில்
    இந்த முறை நாங்கிலி வீட்டின் முறை நாங்கிலி வீட்டின் முன் பார்வாத்தியாரும் இரு வீரர்களும் வந்தனர்
அதில் ஓர் வீரன் “அய்யாமாரே அம்மாமாரே தாயி வீட்டு பெரிய மனுசங்க ஆயம் கேக்க வந்துருக்கோம் சாமி…
வெளிய வா சாமி..” என்றான் நாங்கிலியும் அவர்களுக்காகவே காத்துக்கொண்டிருந்தது போல் உடனே வெளியே
வந்தாள் தலை குனிந்தபடி நின்றிருந்த பார்வாத்தியாரை கவனித்து “தர்மத்தை கற்றவர்கள் தர்மத்தை பின்பற்ற
மாட்டார்களா பார்வாத்தியரே” என்றாள் சிறிது இடைவெளிவிட்டு “இங்கு நடப்பவற்றை அறிந்தும் அமைதியை
கடைபிடித்தீரானால் இதுதான் தர்மமா? ம் நீங்கள் என்ன செய்வீர் ஆயம்தானே வேண்டும் என் உயிரை காக்க
அல்ல கற்பை காக்க”என்று கூறி உள்ளே சென்று ஓர் வாழை இழையையும் அரிவாளையும் எடுத்து வந்தாள்
இழையை நிலவின் அருகே விரித்தாள் தன் மார்பை மறைத்திருந்த துணியை விலக்கினாள் “என் உயிருக்கு
உயிரான கணவனை என்னிடம் இருந்து பிரித்தீர்” என்று கூறி தனது வலப் பக்க மார்பை அறுத்தாள் அறுத்து
அந்த பாகத்தை இழையில் வைத்தாள் பார்வாத்தியர் அதிர்ந்தார் கோபக்குரலில் “என் உயிருக்கு ஆபத்து
என்று கூறினாலும் நான் அடிப்பணியமாட்டேன்” என்று கூறி தனது இடப்பக்க மார்பையும் சதையோடு சேர்த்து
அறுத்தாள் இரத்தம் கொட்டிய உடையோடும் குருதி வழிந்த உடலோடும் மூச்சு காற்றை திணறி திணறி
உள்ளிழுத்து “என்றாவது நாங்கள் உயர்வோம்” என்று கூறி சாய்ந்தாள் நாங்கிலி.கதவில் இரத்தம் படிந்திருந்தது.
வேதாகி வீட்டின் வாசலின் முன் விபியிடம் விடைப்பெற வேதாவும் வந்தாள் சிவந்த விழிகளுடன் இருந்த
வேதா விபியை நோக்கி “நம்ம காதல் ஜெயிக்குமா” என கேட்டாள். விபி வேதாவை நோக்கி கூறலானான்
“கண்ணே கண்களில் தொடங்கி கடைப்பார்வையால் தொடர்ந்து விழி மூடும் வரை நிலைத்து நிற்கும்
நம் காதல்…… உலகம் விழி மூடும் வரை”என்று கூறி முடிக்கும்போது  விபியின் கழுத்தில் வேல்
பாய்ந்தது.வேதா திகைத்து நின்றாள்; வேதாவின் கைகளில் இரத்தம் படிய விபி கழுத்தில் பாய்ந்திருந்த
வேலுடன் இரத்தம் ஓழுக சரிந்தான் வேதாவின் கண்கள் விபி சரிவதை கவனிக்க அங்கு நடப்பதை
முனம் உணர தொடங்கிய உடன் அவள் இட கண்ணில் கண்ணீர் துளித்தது நிலை தடுமாறி
கீழே அமர விபியை தன் மடியில் கிடத்தி குரல் நடுங்கி கதறினாள் கதறி அழ தொடங்கினாள்
“நீசனின் மகன் இறந்துவிட்டான் கொடூரன் அழிந்தான்” என கூறி கைகளில் அரிவாள் வேல் கம்பு
வைத்திருந்த சிலர் கூடி நின்றனர் “இவள்……” என்று கூறி வேதாவை நோக்கி சந்தேக பார்வையை
வீசினர்.சிறிது நேரம் கழித்து வைகுந்தர் அங்கு வந்தார்.மெதுவாக சூழ்ந்திருந்த கூட்டத்தனுள் நுழைந்தார்
ஒருவன் “நாங்கிலி இறப்புக்கு பழித்தீர்தாயிற்று” என்றான் விபியின் குருதி வழியும் உடலை கண்டவுடன்
வைகுந்தர் நிலைதடுமாறினார் அவர்களை நோக்கி “தவறிழைத்துவிட்டீர்” என்றார்.அனைவரும் புரியாத
பார்வை வீசினர் சிறிது இடைவெளிவிட்டு “இவன் ஆளப்பிறந்தவன் தர்மத்தை கற்று நல்வழியில்
நடப்பவன் இந்த உலகிலே நல்லவன் இவன்தான் விபி~ணன் இவன் பெயர் நாமும் வன்முறையில்
செல்லகூடாது என்றுதான் நினைத்தேன் இந்த ராஜ்யத்தை தகர்ப்போம்” என்று உரக்க கூறினார்.
அனைவரும் அந்த சிறிய கோட்டையை முற்றுகையிட செல்ல வேதா விபியை தன் மடியில் வைத்து
அழுதுகொண்டிருந்தாள்.கோட்டையின் வாசலில் மக்கள் கூடினர் கோட்டையின் மாடத்தில் நீசனும்
பார்வாத்தியாhரும் வந்து நின்றனர் “எங்கள்; குல விளக்கை எரித்து சாம்பலாக்கிவிட்டியே” என ஒரு
பெண்மனி அழுதுகொண்டே கேட்டாள் நீசன் “சட்டத்தை கடைபிடிப்பது மக்களின் கடமை நீங்கள்
உங்கள் கடமையை செய்தாள் நானும் அரசனாக இருப்பேன்” மக்களில் ஒருவன் “நீங்கள் போட்டது எல்லாம்
சட்டமாகுமா அதை நாங்கள் மதிக்கவேண்டுமா”என கேட்டான். “அரசன் மக்கள் நன்மைக்காகதான் சட்டம்
இயற்றுவார்” என்று நீசன் கூற “மக்கள் நன்மைக்கா தங்கள் நன்மைக்கா” என கேட்டான் ஒருவன்
“தலை குனிந்திருந்தால்தான் உங்கள் தலை நிமிரும் என ஒர் நாள் கூறினால் நாங்கள் குனிகிறோம்
என்று நாங்கள் நம்பும்போது நீ போடும் சட்டங்கள் எதிராக அப்போது புரட்சி ஏற்படாது” என்று வைகுந்தர்
கூற நீசன் யோசித்துவிட்டு “ கௌரவத்தை விட்டு இங்கு வந்துள்ளீர் யோசிக்க மாட்டீரா… நீங்கள் ஆதரித்து
வந்திருக்கும் பெண் ஒரு சக்கிலிய பெண் அவர்கள் வீட்டில் யாரும் மார்பை மறைப்பதில்லை மீசை வளர்பதில்லை
வரி கட்ட முடியாத வீடு அது மீசை கௌரவம் என்று வரி கட்டி மீசை வளர்க்கும் நீங்கள் எங்கே அவர்கள்
எங்கே பெண்ணின் மானம் காக்க வரி கட்டும் நீங்கள் எங்கே அவர்கள் எங்கே உங்கள் முன்னோர்களை
அவமானப்படுத்த போகிறீர்களா……..” என உரக்க கூற  கூட்டம் கலைந்தது திடீரென்று ஆயிரக்கணக்கான வீரர்கள் குதிரையில்
அங்கு வந்து மக்களை அடித்து விரட்ட வைகுந்தர் செய்வதறியாது நின்றார்.மக்கள் சிலரை வெள்ளை கிடாய்கள் மக்களை துப்பாக்கியால் சுட்டனர்.நீசன் பார்வாதியரை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார்.பார்வாத்தியார் “முதலாளி உதவி செய்தார் போலும்”
என்றார் நீசனிடம்.
ஓன்பது திங்கள் கழித்து
            அதே தென்னை சூழ்ந்த இடம் ஆனால் கோவன் பிறப்பிடம் வேதா பிரசவ வலியால் துடிக்க
கதற சிறிது நேரத்தில் கதறும் சத்தம் நின்றது.ஒரு பெண்மணி வெளியில் நின்றிருந்தவரிடம் “பிட்ட சட்சிக்கேட”
என்றாள் அவள் மொழியில் அவர் சோகமானார். இன்னொரு கிழவி வெளியே வந்து கூறலானாள்
“கவல படது ராசா புட்டுன்டாட”.


                                                                                           -ஈ.தமிழ்மதி

ஞாயிறு, 13 மே, 2018

போர் 2

                                             சமாதானம்     

ஒரே சமயத்தில் உலகம் முற்றிலும் மாறி இருந்தது.2026 ல் அவர்கள் இருந்த இடம் 2019ல் இருந்த இடம் போல் தோற்றம் அளித்தது. அவர்கள் இருந்த இடம் மட்டும் இல்லை மொத்த உலகமும் காலப்பயணம் செய்திருந்தது.கால பயணத்தோடு 1952 காலக்கட்டம் போல் தோற்றம் அளித்தது. சுருக்கமாக சொன்னால் உங்கள் வீட்டின் ஒரு பாதி 1952 ல் இருந்தது போல் தோற்றம் அளிக்கும் ஒரு பாதி இன்று இருப்பது போல் தோற்ற மளிக்கும்.உங்கள் வீடு இருக்கும் இடத்தில் 1952 ல் ஒரு வீடு இருந்திருந்தால் நீங்களும் அவர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இருப்பர்.வெயிலில் சுற்றி பார்க்கும் போது வெப்ப காற்று அடிக்கடி கண்ணுக்கு தெரியுமல்லவா அது போல் வெளிச்ச அலைகள் கால மாற்றத்தால் பூமியில் உழன்றுகொண்டிருந்தனர்.ஒட்டு மொத்தத்தில் இரு காலகட்டங்கள் (1952,2026) ஒரு கால காலகட்டமாக(2019) மாறியது.


மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.ஐன்ஸ்டீன் அந்த பாதாள அறையிலிருந்து வெளியே வந்து பார்த்தார் புது விதமான சூழ்நிலை எதிர்காலமும் இல்லை நிகழ் காலமும் இல்லை கடந்தகாலமும் இல்லை.1952 ஸ்டைல் குறுகிய சாலை 2019 காங்கிரிட் ரோட்டில் பல மக்கள் பதட்டத்தில் ஓடிக்கொண்டிருந்தனர்.மக்களை பார்த்த ஐன்ஸ்டீனும் பதட்டத்தில் திரும்பி ஓட ஆரம்பித்தார். அவர் ஓடிக்கொண்டிருக்கும் போது போர்ட் எஸ்கேப் ஹைபிரிட் கார் அவர் முன் வந்து நின்றது. அவர் அதிர்ந்தார் அந்த ட்ரைவர் "சார் உலகமே பதட்டத்தில் இருக்கு இரு காலகட்ட உலக தலைவர்களும் மான்செஸ்டர் ல பேச்சு வார்த்தை நடத்தலாம்னு இருக்காங்க பிளைட்ல போயிரலாம் வாங்க" என கத்தினார். ஐன்ஸ்டீன் காரில் ஏறினார்.
"இரு காலக்கட்டமா" என கேட்டார்.
"ஆமா மிலா டெமிர் தா சொன்னாங்க"
"என்ன"
"அவங்க 2026 கால ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாவ்க்கிங் ட்ரெயின் தியரியை சோதனை பண்ணும்போது இரண்டு காலமும் இணைந்திருச்சு அவர்தா உங்களையும் பிற உலக தலைவர்களையும் கூட்டிட்டு வர சொல்லி இருக்கார் மக்கள் பதட்டத்தை போக்க"
"சரி சீக்கிரம் போங்க" என்றார் ஐன்ஸ்டீன் அந்த கார் பாய்ந்தது.





16 மணி நேரத்திற்கு பிறகு,மான்செஸ்டர். 

2019 க்கு பிறகு பிறந்தவர்களும் 2020 களில் உருவாக்கப்பட்ட பொருட்கள் மயமாகின. உலகம் பதட்டத்தில் ஆழ்ந்தது ஒரு சிலர் தங்கள் அருகில் இருந்த வேறு காலகட்டத்தை சேர்ந்தவர்களை பயத்தால் அடித்து கொன்றனர். காடுகள் அழிக்கப்பட்டு வீடுகளை கட்டியிருந்த மனிதர்கள் நிலை இன்னும் மோசம் 50 களில் வாழ்ந்த அந்த விலங்குகள் 2000 ம்களில் பிழைத்த மனிதர்களை வேட்டையாடி கொன்றன.ஆங்காங்கே இருந்த அறிவியலாளர்கள் மக்களுக்கு உண்மையை உணர்த்தி சமாதானம் அடைய செய்தனர்.பல நகரம் அமைதியை அடைந்தது காரணம் மக்கள்.மான்செஸ்டர் பீதம் டவரில் இரு கால கட்ட தலைவர்களும் சந்திக்க மிலா டெமிர் ஏற்பாடு செய்திருந்தார்.மிலா டெமிர் எனும் இந்த 43 வயது இரும்பு பெண்மணி தான் மாற்றத்தை உடனே உணர்ந்தார்.2019 ல் திட்டத்தை அங்கீகரித்த தலைவர்கள் அங்கேயே இருந்ததால் உடனடியாக அவர்களிடம் தெரிவித்து மான்செஸ்டரில் கூட்டினார். உடனடியாக மாறிய காலத்தையும் தன் அறிவால் உணர்ந்து அவர்கள் இருப்பிடத்தையும் கண்டறிந்து கூட்டி வர செய்தார்.மிலா டெமிர் ஒரு புத்தக பிரியை அறிவியல் மட்டுமல்ல வரலாறு படிப்பதிலும் ஆர்வம் கொண்டவர் அதனாலேயே இது அவரால் முடிந்தது.ஒரே ஒரு கவலை அந்த ட்ரைனும் தண்டவாளங்களும் மாயமானது.


மக்கள் குழப்பத்தில் இருக்க உலகின் மிக முக்கிய தலைவர்களான (இரு கால கட்ட தலைவர்கள்) 
வடகொரிய அதிபர்(2019) கீம்,ஜப்பான் அதிபர்( 1952) ஷிகேறு ஹோஷிடா ஜப்பான் அதிபர்( 2019) ஷின்ஜோ அபே,சீன அதிபர்(1952) மா சேதுங் சீன அதிபர் (2019) ஸீ ஜின் பிங்க்,துருக்கி ஜெனரல் (2019) ஹலூஸி அகார்,இஸ்ரேல் அதிபர்( 2019) ரேவேன் ரிவ்லின்,இஸ்ரேல் பிரமுகர் ரோத்சைல்டு 
ஜெர்மன் அதிபர் (1952) வில்ஹெம் பெக் ஜெர்மன் அதிபர்(2019) பிராங்க் வால்டர் ஸ்டீன்மெய்ர், பிரான்ஸ் அதிபர்(1952) ரீனே கோட்டி பிரான்ஸ் அதிபர்(2019) இம்மானுவேல் மக்ரோன்,இங்கிலாந்து அதிபர் (1952) வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து அதிபர்(2019)தெரசா மே ,அமெரிக்கா அதிபர்(1952) ஹாரி ட்ரு மேன் துணை அதிபர் டவையிட்.டி. ஐஸேன்ஹோவர் அமெரிக்கா அதிபர்(2019) டொனால்ட் டிரம்ப் மெலானவுடன்,கியூபா அதிபர்(2019)ரவுல் காஸ்ட்ரோ,சோவியத் அதிபர்(1952) ஜோசப் ஸ்டாலின் ரஷ்யா அதிபர்(2019) விளாடிமிர் புடின்,இந்தியா ஜெனரல்(1952) கே.எம்.கரியப்பா இந்திய ஜெனரல்(2019) பிபின் ராவத் மற்றும் பல உலக தலைவர்கள் அந்த வேற்று கொட்டும் பீதம் டவரில் விசிறி கொண்டிருந்தனர்.


தலைவர்களின் இன்ஸ்பிரஷன் அவர்கள் எதிரேயே அமர்ந்திருக்க அவர்களுக்கு ஆர்வம் தாங்கவில்லை பிபின் கரியப்பா ரவுல் காஸ்ட்ரோவுடன் தொடர்ந்து பேச்சு கொடுத்து கொண்டிருந்தார் 
புதின் ஐஸேன்ஹோவெர் மற்றும் ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருந்தார். டிரம்ப் மிலா டெமிருடன் கடலை போட்டு கொண்டிருந்தார்.உடனே சர்ச்சில் "இப்போ எதுக்கு இங்க வந்துருக்கோம்" என கத்தினார்.அனைவரும் சர்ச்சிலை திரும்பி பார்த்தனர் டிரம்ப் தனது சாம்சங் தங்க நிற போனின் திரையில் விரலை தேய்த்துவிட்டு "எப்போ நெட்ஒர்க் கிடைக்கும்" என ட்ருமனிடம் கேட்டார் ட்ரூமன் தனது புருவத்தை உயர்த்தினார்.
"இங்க பாருங்க நாம மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பனும்னு இங்க இருக்கோம் மிஸ்ஸஸ் இதெல்லாம் உங்க தப்புதான் என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்க" என மிலா டெமிரிடம் கேட்டார் சர்ச்சில்.
மிலா ட்ரைன் தியரி யை விலக்கிவிட்டு
"ஒளியை விட ஒரு பொருள் வேகமா போகும்போது அது இன்னொரு டைமென்ஷன் கதவை திறக்க வாய்ப்பிருக்கு இப்போ அது இன்னொரு கால கட்டத்தை திறந்துருச்சு இதுக்கு நான்தான் முழு காரணம்" என பொறுப்பை ஏற்றுக்கொண்டார் மிலா.
"இரண்டு கால கட்டங்களை சேர்ந்த ஒரே ஆள் ஒண்ணா இருப்பது ஆபத்துதானாமா ம்..... படிச்சுருக்கன்" என கூறினார் ஜெனரல்.கரியப்பா. 
"ஆமா உடனடியா மக்களுக்கு இத தெரியபடுத்தனும் இல்ல பயத்தால நிறைய இழப்பு ஏற்படும்" என்றார் ஜ்யோங் க்யோய்ங் டூ(தென் கொரியா ஜெனரல்).
அனைவரும் ஆலோசனையில் ஆழ்ந்தனர். ஐன்ஸ்டீன் பரபரவென ஆலோசனை கூடத்தில் நுழைந்தார்.அனைவரும் அவரை பார்த்து எழுந்து நின்றனர்(டிரம்ப் தவிர) "வேனாம் உட்காருங்க என" பணித்தார் ஆல்பர்ட்.
"இதுக்கு நீங்காத ஒரு நல்ல முடிவை தரணும் ஆல்பர்ட்" என்றார் ஸ்டாலின்.
"ஒரு நிமிஷம் பாடிஸ்டா எங்கே? " என கேட்டார் இம்மானுவேல்.
"பாடிஸ்டா இறந்துட்டாரு" என்றார் ஐஸேன்ஹோவர்.
"எப்படி" என கேட்டார் இம்மானுவேல்.
"பிடல் தா கொன்னுட்டாரு" என்றார் புதின்.
"53 லதான சர்வாதிகாரத்திற்கு எதிரா தாக்குதல் நடத்தினார்." - இம்மானுவேல்.
"இல்ல 52 லேயே முயற்சி பண்ணாரு" என்றார் ரவுல்.
"குழப்பத்தை பயன்படுத்தி வென்றுட்டார்" -புதின் .
"இங்க நா உக்காந்துட்டு இருந்தாலும் அங்க இந்நேரம் என் கைல இருக்கும் ரத்த கரைய ரசிச்சுட்டு இருப்பேன்"-ரவுல்.
"சரி ராணி எங்க?" என கேட்டார் ஆல்பர்ட்.
"எலிஸிபத் அவங்க கூட பேசிட்டு இருக்காங்க" என சிரித்துக்கொண்டே சொன்னார் ஸ்டாலின். நோய்வாய் பட்டிருந்த ஸ்டாலினுக்கு அந்த சிரிப்பு கொஞ்சம் தெம்பை ஊட்டியது. 



ஆலோசனை கூடத்திற்கு வெளியே, 
92 வயது ராணி எலிசபெத் 26 வயது இளம் ராணி எலிசபெத்துடன் பேசி கொண்டிருந்தார்.
"நாம உள்ளேபோக வேண்டாமா உள்ள எல்லாரும் ....." -இளம் எலிசபெத்.
"நாம போக தேவையில்லைமா" -எலிசபெத்
"அப்போ எப்படி உள்ள பேசறது தெரியும்" -இளம் எலிசபெத்.
"நமக்கு அவங்களே வந்து சொல்லுவாங்கமா" - எலிசபெத்
"ஓ.... அப்படியா ந. .நா நினை. ..நனைச்சே பாக்கல உங்கள. .ச்சீ என்ன நா பாப்ன்னு" என பதட்டத்துடன் உளறினார்.
"நா அதாவது நீ இப்படித்த துறுதுறுன்னு இருந்தேன் டால் பிறந்ததுக்கு அப்போரம்தா நம்மள சுற்றி என்ன நடக்குதுன்னு உணர்ந்த நீ நிறைய கத்துக்க வேண்டியது இருக்குமா"
"பிலிப் எப்படி இருக்காரு ஆன்,சார்லஸ் எப்படி இருக்காங்க எனக்கு எத்தனை குழந்தை பிறந்தாங்க"
"எனக்கே என் மேல் சந்தேகமா இருக்கும் நா நல்ல ஒரு குடும்ப பெண்ணானு உன் மூலமா அந்த சந்தேகம் தீர்ந்துச்சு பிலிப் உன் பிலிப் கூடாதான போனாரு பாக்கிலிய நீ ரொம்ப பகல் கனவு காணுவண்ணு எனக்கு தெரியும். உனக்கு மொத்தம் நாலு குழந்தை."
"நா அவங்கள பாக்கலாமா"
"தெரியல,அவங்க என்ன முடிவெடுக்கறாங்கன்னு பாப்போம்"
"ஏன் அவங்கள பாக்க கூடாது?" 






ஆலோசனை கூடம்
பேச்சு வார்த்தை 3 மணி நேரம் தொடர்ந்தது. 
"இப்போ எலிசபெத் தன் இளம் வயதுடன் பேசறதே தப்பு" என்றார் ஐன்ஸ்டீன்.
"அது இயற்கைக்கு எதிரானது" என்றார் மிலா.
"இரு காலகட்டத்தை சேர்ந்தவங்க ஒண்ணா இருக்கறதே தப்புதானே"-புதின்.
"அப்போ என்ன பண்றது"-ஐஸேன்ஹோவர்
"மக்களை பிரிக்கணும்" என்றார் ஐன்ஸ்டீன்.
"எப்படி?" - சர்ச்சில்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


21 மணி நேரத்திற்கு பிறகு 
பீதம் டவரின் வெளியே ஒரு சில தலைவர்கள் வந்திருந்தனர் ஸ்டாலின் ஐஸேன்ஹோவர் கொரியா அதிபர்கள் கிளம்ப வேண்டிய கட்டாயம் காரணம் ஏனெனில் தீர்மானம் அப்படி. 
ஆரம்பித்த மிலா வே பிரச்னையை முடிக்கும் தீர்மானத்தை தொடங்கினார்.மக்கள் அந்த டவரின் முன் ஆர்ப்பரித்து கொண்டிருந்தனர்.அரசாங்கத்திற்கு எதிராக கூச்சலிட்டு கொண்டிருந்தனர்.
"மதிப்பு மிகுந்த மக்களே அறிவியல் எனும் கடவுள் நமக்கு எதிராக சாத்தனாக வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை அறிவியலாளர்களுக்கு தெரியும் இரு கால கட்டத்தை சேர்ந்தோர் ஒரே இடத்தில் இருந்தால் என்னவாகும் என்று ஏனோ விதி நம்மை தண்டிக்கவில்லை" என்றவுடன் மக்கள் கூட்டம் கூச்சலிட்டது "authority down down" என்றும் "மிலா down " என்று கூச்சலிட்டது மிலா நிறுத்தி கூற ஆரம்பித்தார் உரக்க "ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் கூடிய விரைவில் உலகம் பழைய நிலைக்கு திரும்பும் அதுவரை 2000 மாம் மக்கள் அமெரிக்க ஐரோப்பா கண்டங்கள் அதாவது உலகின் ஒரு பாதி மேற்கு திசையிலும் 50 கள் மக்கள் ஆசியா ரஷ்யா ஆஸ்திரேலிய உலகின் மற்றொரு பாதி கிழக்கு திசையிலும் குடியமர்த்தப்படுவார்கள்.மக்கள் பொறுமை காக்க வேண்டும்.ஆட்சியாளர்கள் இந்த பீதம் டவரில் வாரம் ஒரு முறை கூடி மக்களுக்கு தேவையான உணவு,கல்வி,சுகாதாரம், மருத்துவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.இதுவே அமைதிக்கான ஒரே வழி" என கூறி நகர்ந்தார்.
அந்தந்த கால கட்ட மக்கள் கிழக்கு மேற்கு பகுதிகளுக்கு அந்தந்த நாட்டின் ராணுவம் மூலம் கொண்டு செல்ல பட்டனர்.



7 வது நாள்
அமெரிக்கா,மான்ஹாட்டன், டிரம்ப் டவர்
6 நாட்களில் மக்கள் அந்தந்த காலகட்ட மக்கள் அந்தந்த திசைகளில் குடியமர்த்தப்பட்டனர்.வீடு அல்லாதவற்கு முகாம் அமைக்க பட்டிருந்தது.மக்கள் குடியமர்த்தப்படும்போது நெரிசலால் மக்கள் பலர் இறந்தனர்.50 களில் பிறந்த ஒருவற்கு மாற்றம் ஏற்படுமாயின் அது 2000 த்தில் இருக்கும் அவருக்கு அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

டிரம்ப் தனது மகன் டொனால்டை அழைத்திருந்தார். டொனல்டும் ஹாலில் நடந்து வந்து கொண்டிருந்தார்."ஹே டொனால்ட் கம் " என்றார் ஒரு முதியவர் அவரை கட்டிப்பிடித்தார். 
"எப்படி இருக்கீங்க"
"நா நல்லா இருக்கான்"
"ஏன் பிரென்ட் கேட்டாரு இந்த கால கட்டத்தை சேர்ந்த ஒரு தலைவரை அந்த கால கட்டத்தை ஒருத்தர் சுட்ட என்ன ஆகும்னு"
"இல்ல டிரம்ப் கூப்பிட்டார் நான் அப்பறோம் வந்து பதில் சொல்றேன்" என்று கூறி கிளம்பினார்.அவர் சொன்னதை யோசித்து கொண்டே கிளம்பினார்.டிரம்ப் பின் ரூமினுள் நுழைந்தார்.
"நான் நேத்து சொன்னதை யோசிச்சியா son" என கேட்டார் டிரம்ப்.
"ப்ரெசிடெண்ட் அதெல்ல. ....."
"டாட் னே கூப்பிடு டொனால்ட். "
"அதெல்லா முடியாது டாட் " என குரலை தாழ்த்தி சொன்னார்.
"டொனால்ட் இது உலக அமைதிக்காக"
"எதுக்காகவும் முடியாது" என கத்தினார் டொனால்ட்.
டிரம்ப் டொனால்டின் கன்னத்தில் கைவைத்தார் டொனால்ட் தட்டிவிட்டார் மறுபடியும் டொனால்டின் இரு கன்னத்தையும் தன் இரு கைகளால் பற்றினார்.
"உன்னால மட்டும்தா முடியும் டொனால்ட் உன்ன மட்டும்தா நா நம்புற உன் டாட் ஹீரோதான எனக்காக" என கூறி கையில் ஒரு கன் னை கொடுத்தார்.




-தொடரும்......

திங்கள், 7 மே, 2018

போர்


2019 
2018 இறுதியில் பாரிஸில் உலக அறிவியலாளர்கள் ஸ்டீபன் ஹவ்க்கிங்கின் train கோட்பாட்டை இயக்க முடிவெடுத்தனர்.ஐ. நா வும் இதற்கு அனுமதி அளித்தது.அதற்காக உலகை சுற்றி தண்டவாளம்
அமைக்க உலக நாடுகளின் அரசுகளும் ஒப்பு கொண்டன. 

வெள்ளை மாளிகை ,வாஷிங்க்டன் டீ.சி 
டிரம்ப் வைட் ஹவுஸ் வாயிலில் நடந்து வந்து கொண்டிருந்தார் அவர் மனைவி மெலனியா டிரம்ப் காதோரமாக சென்று"people's waiting" என்றார். அவர் சொன்னதை கேட்டவுடன் தன் வேகத்தை முன்பு நடந்ததை விட குறைத்து நடந்தார்.எதிரில் டிரம்ப் மகன் டொனால்ட் வந்து கட்டி அணைத்தார். "ப்ரெசிடெண்ட் உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் எப்போவுமே ஒருத்தங்க உன் கிட்ட கட்டளை போட்ட அது நல்லதா இருந்தாலும் ஒத்துக்கதான்னு சொல்லுவீங்க இப்போ எப்படி இவ்ளோ பெரிய அக்ரீமெண்ட்க்கு சம்மதிச்சிங்க"
"son, 'i'm almost honest to be a politician" என்று கூறி நடந்தார் டொனால்ட் கண்ணில் ஒரு கர்வ பார்வை. தனது கையை அசைத்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்தார் வெள்ளை மளிகை முன்பு கேள்வி கணைகள் நாணில் தொடுக்கபட்டன முதலில் ஒரு பத்திரிக்கையாளர் "உங்களுக்கும் play boy மாடல் சீண்ட............" அவரை டிரம்ப் இடைமறித்து
"நீங்க பிரஸ் மென்னா இல்ல பப்லிஷ் மென்னா" என கேட்டார் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரித்தனர்.இன்னொரு பெண் சி.என்.என் பத்திரிகையாளர் "உலகத்துல பஞ்சம் பட்னி நிறைந்துருக்கற இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய அறிவியல் ப்ராஜெக்ட் தேவையா அத பத்தி சாதாரண மக்களுக்கு புரியற மாரி சொல்லுங்க"
"அதாவது...... (இருமிவிட்டு) ஒரு நிமிஷம் மெலனியா சொல்லுவாங்க" என கூறி டிரம்ப் நழுவினர்.
"உலகத்தை சுற்றி ஒரு தண்டவாளம் அமைக்கப்படும் கடல்,ஆறு,எரிமலை இது எல்லாத்துக்கும் அந்தந்த இடத்திற்கேற்ப இப்போ கடல்னா மிக பெரிய தூண் மூலம் இல்ல மிதக்கும் பாலம் மூலம் தண்டவாளம் அமைக்க படும் இதல்லாம் எதுக்குன்னா எல்லாத்துக்கும் தெரியும் மற்றவரை தன் அறிவின் மூலம் ஊனம் என நினைக்க வைத்த ஹாவ்க்கிங் இறந்துட்டாரு அவரோட தியரி சாத்தியமானு பாக்காத இந்த ப்ராஜெக்ட் ஏனா நாம அறிவியல் மூலம் வளர்ந்தா கண்டிப்பா சமூகமும் மலரும் இந்த தண்டவாளத்துல ஒளியை ஒத்த வேகம் உடைய ட்ரெயின் ஓடும் எத்தனை நாள்னா ட்ரைன்ல பயணிக்கறவங்க ஒரு நாள் ஆயிருச்சுங்கறதா உணரும் வரைக்கும் அவரோட தியரி படி இந்த மாறி ஒரு ட்ரெயின் உள்ள இருப்பவர்கள் ஏழு நாள் ஆயிருச்சுன்னு நினைக்கும் வரைக்கு ஓடும்போது அவங்கள பொறுத்தவரை அது ஏழு நாள் தா ஆனா அவங்க வெளிய வந்து பாக்கும் போது 100 வருஷம் ஆயிருக்கும் இதுக்கு பேரு .........." மைக்கை டிரம்ப் இடைமறித்து "இதுக்கு பேர் ஸ்டீபன் ட்ரெயின் தியரி இதன் படி 15 வருசத்துக்கு இந்த ட்ரெயின் ஓடும் இன்னொரு நல்லதுன்னா இது தோல்வி அடைஞ்சா கொண்டுபோக முடியாத இடத்துக்கும் ஏழை மக்களுக்கு உணவை கொண்டு போய் சேர்க்க முடியும்" என்றார்.
"சார் நாம இப்போத 430 km/h கொண்ட ட்ரைன கண்டு புடிச்சிருக்கும் அப்போ எப்படி ஒளியை ஒத்த வேகம் சாத்தியமா அப்பறோம் பணம் நிறையவே தேவைப்படுமே " என ஒருவர் கேட்டார் .
"பணத்தை அந்த ட்ரைன்ல பயணிக்கறவங்க இன்வெஸ்ட் பண்ணுவாங்க. இந்த ட்ரைன ஹாவ்க்கிங் இருக்கறப்போவே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க மறக்க வேண்டாம் நாம bicycle அ கண்டு பிடிக்கரக்கு முன்னாடியே ட்ரெயின் ந கண்டறிந்தவர்கள் " என்று கூறி டிரம்ப் நகர்ந்தார். 




ரஷ்யா அரசு அலுவலகம்,மாஸ்கோ
புதின் தனது அதிகார மேஜையை நோக்கி வளாகத்தில் நடந்து கொண்டிருந்தார்.ஒரு சிறுவன் புடினை ஓடிவந்து இடைமறித்தான் காவலர்கள் அவனை தடுக்கவில்லை "நான் ளூசிப்" என்றான் அச்சிறுவன் "நான் வியாதிமிர் புதின் உங்களுக்கு நான் உதவி பண்ணலாமா" என புதின் கேட்டார்.
"நீங்க மக்களின் நலனுக்காகத்தான் போராடுவேன்னு சொல்லியிருக்கீங்க உங்க பிரஸ் மீட் பார்த்தான் இந்த அறிவியல் மூலமா தண்டவாளம் அமைக்கறதால நிறைய இயற்கை வளம் பாதிக்க படும் இது தேவையா மிஸ்டர்.புதின்" 
"நீங்களே சொல்லுங்க எதுக்காக அறிவியல் கண்டுபிடிப்பு சோதனை நடத்தப்படுத்து"
"முதல எல்லாம் ஏகாதிபத்திய நாடுகள் பிற எதிரி நாடுகள அச்சுறுத்த தன் வலிமைய காட்ட அறிவியல் ஆயுத சோதனைகள் மேற்கொண்டங்க இப்போத எல்லோரும் ஒற்றுமையதான இருக்கோம் இது யார அச்சுறுத்த" என அந்த சிறுவன் கேட்டான்.
புதின் அச்சிறுவனின் கண்ணை பார்த்தார் அச்சிறுவன் உயரத்திற்கேற்ப முட்டியிட்டர் தன் உதட்டின் மேல் விரல்களால் தடவி கூறினார் "இந்த பிரபஞ்சத்துல நாம மட்டும் இல்லப்பா" .





1952,ஸ்விட்சர்லாந்து,பேர்ன் 
இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜார்ஜ் Ostermundigen நகர பாதாள அறையில் நடந்து கொண்டிருந்தார் ஒரு கதவு பச்சை நிறத்தில் மின்னியது அக்கதவருகே சென்றார் அங்கே கைரேகை உணர்வின் மேல் தனது கையை பதித்தார். அந்த இருட்டான அறையில் மிஸ்டர். பிரைன் மிஸ்டர். பிரைன் என தன் கையை தட்ட இருட்டிலிருந்து ஒரு சேமியா மண்டை எட்டி பார்த்து "என்னை அப்படி கூப்பிடாதிங்கனு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் ஜார்ஜ்" என்று சொல்லி விளக்குகளை எரியவிட்டார் ஐன்ஸ்டீன்.
"ப்ராஜெக்ட் எல்லாம் சரியா போகுதா" என கேட்டார் அரசர் ஜார்ஜ்.
"நீங்க உலக ஏகாதிபத்தியத்தை உங்க கைல வெச்சு இருக்கீங்க இருந்தாலும் உலக அமைதி ன்னு சொன்ன வார்த்தைக்காக ஜார்ஜ் உங்களுக்காக இந்த ப்ராஜெக்ட்க்கு ஒத்துக்கிட்டேன்"
"கவலை வேண்டாம் ஆல்பர்ட் இங்கிலாந்த நம்பி தாராளமா தரலாம்" என்றார் ஜார்ஜ்.
"இங்கிலாந்த நம்பி இல்ல உங்கள நம்பி" என்று கூறி மெதுவாக எழுந்தார் ஐன்ஸ்டீன்.அந்த அறையின் ஒரு மூலையில் சென்றார் அங்கே சுவற்றை தட்டினார். அந்த சுவரு கதவு போல் திறந்தது. நீல நிற வெளிச்சம் அந்த அறையில் பரவி இருந்தது. அந்த அறையின் நடுவில் ஒரு பிரம்மாண்ட கருங்குழி மிதந்து கொண்டிருந்தது. 20 விஞ்ஞானிகள் அந்த அறையில் அங்கும் இங்கும் உழன்று கொண்டிருந்தனர்.ஒரு பெண் ஐன்ஸ்டீனிடம் வந்து "சார் ஈர்ப்பு விசையை இன்னும் கொறைச்சிருக்கோம்" என்றார். "ஈர்ப்பு" என சந்தேகத்துடன் கேட்டார் ஜார்ஜ்."கிங் ஜார்ஜ் சாதாரண மாவே கருந்துளைகள் தன்னை சுற்றி உள்ள பொருளை தனக்குள்ள ஈர்த்துக்கொள்ளும் நாம ஒரு செயற்கை கருந்துளையை உருவக்கோரம் அத நுண்ணியதா உருவாக்கும்போதே ஏற்பு விசையை குறைச்சா நமக்கு நல்லது" என்றார் ஐன்ஸ்டீன்.
"நாம டைம் மெஷின் பற்றி பேசும்போதே நினைச்ச எதுக்கு கருந்துளை" 
"ஜார்ஜ்,டைம் ட்ராவல் பண்ண மூணு வழிதான் அடிப்படை ஒன்னு டைம் மெஷின்,ஒளியை விட வேகம், கருந்துளை. டைம் மெஷின்லயே நிறையா தியரி இருக்கு நாம பண்றது கருந்துளை மூலமா டைம் மெஷின்,ஒளியை விட வேகம் எவ்வளவு சுலபம்னு தெரியல ஆனா கருந்துளை நம்மள சுற்றி இருக்கு ஆனா மிக நுண்ணிய அளவுல இருக்கு ஒரு கருந்துளை பக்கத்துல இருக்கற இன்னொரு கருந்துளை ஈர்க்கும் இப்படி ஒவ்வொன்னும் இன்னொன்னு ஈர்க்கறப்போ அது ஒரு பெரிய கருந்துளையை உருவாக்கும் ஆனா இதல்லாம் தான நடக்காது நாம நடத்தணும் நீங்க டைம்னு சொன்னப்ப எனக்கு கருந்துளை தான் ஞாபகம் வந்தது. ஆனா நம்மள சுற்றியுள்ள கருந்துளை எவ்வளவு நுண்ணியதுன்னு தெரியல கருந்துளை இறந்த நட்சரத்துல இருந்து உருவாகும் அது எப்படி பூமிலனு தெரியல நம்மக்கு பின்னாடி வரவங்க கண்டறியலாம் இப்போதைக்கு இதோட ஈர்ப்புவிசை உங்க காலுக்கு கீழ தெரியுதே இந்த 60 அடி சிவப்புக்கோடு இதுக்கு மேல உங்க சுண்டு விரல் போனாலும் உங்கள உள்ள இழுத்துரும் ஆனா கட்டுப்பாட்டுல வைக்க 5 வருஷம் ஆகும்.காலப்பயணம் சாத்தியம்"என்றார் சிரித்துக்கொண்டே சேமியா மண்டை.
"நீங்க சொல்றது பாதிதான் புரிஞ்சுது.... அது சரி ஸ்டாலின் அயர்ன் ரன் இன்னும் சகாலை இன்னும் சகாலைனு புலம்பரராம சோவியத் இரட்டை உளவாளி ஒருத்தர் சொன்னாரு"
"சொல்லிதான் தெரியனுமா, அவர் மனது அளவுல நிறைய பாதிக்கப்பட்டுஇருக்காரு காரணமே நீங்கதான.ஒருவேளை அவர் சொல்றதும் உண்மையா இருக்கலாம்".
"அயர்ன் ரன் பத்தி பேசும் போது ஒரு சம்பவம் ஞாபகம் வருது 10 வருசத்துக்கு முன்னாடி 1942ல ஜெர்மன் இரட்டை உளவாளி ஒருத்தன் பிணம் நம்மகிட்ட வந்துச்சு அவன் கை ஒரு காகிதத்தை இறுக்கி பிடிச்சிருந்தான் அதுல அவன் மரணத்தோட கடைசி நொடிகள் இருந்துச்சு என்ன இருந்துச்சுனு தெரியுமா பிரைன்"
"என்ன ஜார்ஜ்..."
"அது நாஜியோட எனிக்மா கோட் சீக்ரெட் கோட் அத ஆலன் டூரிங் கம்ப்யூட்டர் மூலம் உடைச்சு பார்த்தோம் அந்த இரட்டை உளவாளி அயர்ன் ரன் தனியா இருக்கும்போது அவர் தலைல துப்பாக்கிய வச்சிருக்கான்"
"wolf தலைலயா"
"ஆமா wolf தலைல கன்னவச்சு கேட்ருக்கான் நீதான் உலகத்துக்கே தலைவன்னு நினைச்சுட்டு இருக்கியா உன்ன இப்போ கொல்லப்போறேன் சொல்லு அமெரிக்கா வாழ்கன்னு சொல்லுன்னு கேட்டு இருக்கான் இந்த உலகத்துல நீமட்டும் இல்லன்னு தெரிஞ்சுக்கோ அப்டினும் சொல்லியிருக்கான் அதுக்கு wolfஇந்த உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியுமா நீ என்ன எதிரியா நினைக்கிற காரணம் உன் அரசன் எதிரியா பாக்க சொல்லி இருக்கான்.குடும்பத்தை உன் உலகமாக்கி
உன் வேலைய வாழ்க்கையாக்கி இனம் நாடு மொழிய உன் கடவுளாக்கி உன்ன ஏமாத்திட்டு இருக்காங்க உண்மையை சொல்ல போன இந்த பிரபஞ்சத்துல நாம மட்டும் இல்லப்பா ன்னு சொல்லியிருக்காரு" என்றார் ஜார்ஜ்.
"சரியாதா சொல்லி இருக்காரு" என்றார் சேமியா மண்டை.





2026,அமெரிக்கா,நியூ யார்க் 
பிப்ரவரி 25, 2.30 pm
பத்திரிக்கையாளர்களும் மக்களும் அந்த பிரம்மாண்ட ரயில் நிலையத்தில் கூடி இருந்தனர்.பலர் எதிர்ப்பும் பலர் ஆதரவு ஒலியையும் எழுப்பினர்.தலைமை ஆராய்ச்சியாளர் மிலா டெமிர் மக்களிடம் மைக் ஏதும் இல்லாமல் பேச துவங்கினார் ஆனால் அது நவீன தொழிநுட்பம் மூலம் அந்த அரங்கம் முழுதும் எதிரொலித்தது."இங்கு அமர்ந்திருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி,ரஷ்ய அதிபர்,சீனா ஜப்பான் கொரியா அதிபர்களுக்கும் மற்றும் பல நாட்டை சேர்ந்த அதிபர் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும், இங்கிலாந்து அரசருக்கும் மதிப்பிற்குரிய மக்களுக்கும் வணக்கம். இன்று ஆப்ரிக்கா மற்றும் சில ஆசிய பகுதியில் மக்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதை கேள்விப்பட்டோம் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இன்றைய ஆராய்ச்சியில் இது முழுமையை எட்டவில்லை. அவர் தியரி படி செகண்டுக்கு 7 முறை உலகை சுற்ற வேண்டும் ஆனால் இது ஒருமுறைதான் சுற்றும் இது தோல்வி அடைய வாய்ப்பில்லை அடைஞ்ச மக்களுக்கு பெரிய அளவுல உதவியா இருக்கும். இத பத்தி முன்னரே அறிக்கை வெளியிட்டாச்சு இது இன்னும் ஆறு நிமிடத்தில் தொடங்கிரும். இதோட பாதை அமெரிக்கா, பசிபிக், நைஜீரியா, எத்தியோப்பியா, இந்தியா tn ,மலேசியா, பசிபிக்,அமெரிக்கா அதிபர்கள் கொடி அசைத்து துவங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறது. 
10. ..9. ..8. ..7. ...6. ...5. ..4. ..3. ..2. .1. ...ட்ரெயின் ஸ்- 34 கிளம்பியது அதன் நடவடிக்கையை கணினி அறிவித்தது. "வேகம் 300000 m/s வேகம் அதிகரிக்கறது இப்போது 1000000 m/s இப்போது 199237452 m/s 
இப்போது முழுவேகம் 221453387 m/s உலகத்தை ஒருமுறை சுற்றியது ஒரு வினாடி
உலகத்தை இருமுறை சுற்றியது 1.53 வினாடி 
உலகத்தை மூன்று முறை 2.23 வினாடி 
உலகத்தை நான் முறை 3.02 வினாடி 
..................................................................
....................................................................................
.......................................................................
.......................................................................
...........................................................................
.........................................................................
.........................................................................
..................................................................................
...............................................................................
உலகை 1030வது முறை .................



1952,இங்கிலாந்து
பிப்ரவரி 25,8.00 am 
இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜார்ஜ் இன் ஈம சடங்கு நடந்து கொண்டிருந்தது. ஐன்ஸ்டீன் சடங்கில் கலந்து விட்டு பெர்ன் நகர ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றார் .உள்ளே நுழைந்தவுடன் அஸிஸ்டண்ட்கள் கேட்டனர் "அடுத்த அரசர் யார் சார் இந்த ஆராய்ச்சியை தொடர முடியுமா" "இனி ஆராய்ச்சியை தொடர முடியாது அடுத்த அரசி எலிசபத் உடனே ப்ளாக் ஹோல் அழிச்சிருங்க சீக்கிரம். ...சீக்கிரம்" என கத்தினார் ஐன்ஸ்டீன் அஸிஸ்டண்ட்கள் அவசர அவசரமாக பேக் செய்தனர். "முக்கிய பொருளை மட்டும் எடுங்க இத தகர்க்க போறோம்" என கத்தினார் ஒருவர். ஐன்ஸ்டீன் ஒரு சைனை கீழே விட்டு விட்டார் திடிரென அது கருந்துளையை நோக்கி சென்றது ஐன்ஸ்டீன் திடுக்கிட்டார்.அந்த இடத்தில் பலத்த காற்று அனைத்து பொருளையும் அக்கருந்துளை ஈர்த்தது அனைவரும் அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்க பட்டனர்."என்ன ஆச்சுன்னு தெரியல எல்லாரும் வெளிய போங்க வெளிய போங்க என கத்தினார்.அனைவரும் கஷ்டப்பட்டு வெளியேறினர். 


2026,அமெரிக்கா,நியூ யார்க் 
பிப்ரவரி 25, 3.02 pm
ஒவ்வொரு நாட்டில் உள்ளவரும் அந்த ரயில் போவதை வினாடிக்கு ஒருமுறை பார்த்தனர். கன்னியாகுமரியில் ஒவ்வொரு முறை ட்ரெயின் கடக்கும் போது கூச்சல் ஆரவாரம் அரைமணி நேரம் ஆகியும் ஓயவில்லை திடீரென அடுத்த நொடி அந்த ரயிலை கன்னியாகுமரியில் காணவில்லை சொல்ல போனால் எங்கும் காணவில்லை அது மாயமானது.
1033 ......... புதினிடம் "சார் எதோ பிரச்சனை" என்றார் மிலா டெமிர்
"என்ன..." என கேட்டார் ஓவென்
"தெரியல ஆனா ட்ரைன காணோம்"
அனைவரும் அதிர்ந்தனர். 

திடிரென அனைவர் கண்ணுக்கு முன்னும் ஒளிப்பிழம்பு தெரிந்தது அது டிரம்ப் கண்ணுக்கு புதின் கண்ணுக்கு கிம் கண்ணுக்கு ஐன்ஸ்டீன் கண்ணுக்கு 2019 மக்கள் கண்ணுக்கு 1952 மக்கள் கண்ணுக்கு இன்னொரு கண்ணாடி போன்ற பிம்பமும் தெரிந்தது. ஹாவ்க்கிங்காலும் ஐன்ஸ்டீனாலும் 1952, 2019 ஒரே உலகமாய் சங்கமித்தது மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 
மிலாடிமிர் "cloverfield " என முணுமுணுத்தார். 



-தொடரும்..........

வியாழன், 1 மார்ச், 2018

History of SYRIAN WAR

                                               சிரியா 

 நீங்கள் வீட்டில்குடும்பத்துடன் உணவருந்தி கொண்டிருக்கிறீர்கள் திடீரென 
உங்கள் காலடியில் ஒரு வெடிகுண்டு வந்து விழுந்தால் என்ன செய்விர்கள் ?
அவ்வாறு எப்படி நடக்கும் என்று யோசிக்காதீர்கள் இன்று சிரியாவின் நிலை 
அதுதான்.குழந்தைகளும்,பெண்களும் குண்டுகளுக்கு பயந்து ஓடும் காட்சிகளையும்,போட்டோக்களையும் நாம் நம் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து 
பார்த்து கொண்டு உச்சுக்கொட்டி கொண்டிருக்கிறோம்.
தற்போது சிரியா வில் நடந்து வரும் உள்நாட்டு போர்  தீவிரமடைந்துள்ளது
இதற்கு காரணம்.அரசின் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐசிஸ் 
இடையே நடுக்கும் போர்தான் சிரியா உள்நாட்டு போர் .சிரிய  போர் அந்நாட்டின் தலைவர் பஷார் -அல் -அசாத் எதிராக தீவிரவாத அமைப்பு ஐசிஸ் கிளர்ச்சியாளர்க்கு கிடையேயான போர்   என்று கூறப்பட்டாலும் இதன் பின்புலம் வேறு.
1908

     ஆட்டோமேனியா துருக்கி (ottamon empire) தனது ஆட்சியின் கீழ் தற்போதைய செர்பியா,பல்ஜிரியா,அல்பேனியா,துருக்கி,கிரீஸ்,மாண்டிநீக்ரோ,பொசினியா,குரேவசியா,ஈரான்,ஈராக்,சவூதி அரேபியாவின் ஒரு சில பகுதிகள்,சிரியா நாடுகளை கொண்டிருந்தது.1908 துருக்கி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தலைவர் அஹ்மத் நியாஸ் பாய் ஆல் 200 இளைஞர்களுடன் 3 ரேஷன்களால்   இளந்துருக்கியர்புரட்சியை    மேற்கொண்டார் .



இந்த புரட்சி நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ண அவசர நிலையை உணர்ந்து கொண்ட சுல்தான் 1876ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் மீளுருவாக்கம் ,படைகளின் சீர்திருத்தம்,இரண்டாம் அரசியலமைப்பு அரசை அறிவித்தார்.
இதனால் ஆட்டோமான் பேரராசு வீழ்ச்சியை சந்திக்க தொடங்கியது. 
1912 பால்கன் நாடுகளான செர்பியா,மண்டி நீக்ரோ ,பல்ஜிரியா,க்ரிஸ் மற்றும் அல்பேனியா நாடுகள் துருக்கியின் பலவீனத்தை அறிந்து தன சுதந்திரத்தை அறிவித்து கொண்டன.அதோடு துருக்கி யுடன் போர் செய்து ஆட்டோமெனின் துருக்கியின் பெரும் பகுதியை கைப்பற்றியது .இது ஆட்டோமெனின் துருக்கியின் வீழ்ச்சிக்கு மேலும் காரணமாயிற்று.
1916 அரபு புரட்சி சிரியா,ஈரான்,ஈராக்,சவூதி குடியரசை அறிவித்து கொள்ள உதவி புரிந்தது .முதல் உலக போருக்கு பின் ஆட்டோமான் பேரரசு முழுமையாக கவிழ்ந்தது.1922 ஆறாம் முகமது சுல்தான் நாட்டை விட்டு வெளியேற துருக்கி ஒரு முழு குடியரசு நாடாக உருவெடுத்தது.
20ம் நூற்றாண்டு பாதியில் ஈரான்,ஈராக்,சிரியா ,சவூதி அரேபியா நாடுகள் முன்னேற்றத்தை அடைய தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வளத்தை பயன்படுத்தி கொண்டன.மே 6 ,1908 பிரித்தானியா  கம்பெனி எண்ணெய் கிணறு ஒன்றை வெட்டி பெட்ரோலியம் எடுத்ததே எண்ணெய் வள வரலாறு துவக்கத்திற்கு காரணமாய் அமைந்தது .
மத்திய கிழக்கு நாடுகள் 1980ல் எண்ணெய்  வளத்தால் பெருமளவு வளர்ச்சியை சந்தித்தது.இதனால் 80களில் மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதாரம் வல்லரசு நாடுகளுக்கு இணையாக சென்றன .இது வல்லரசு நாடுகளான அமெரிக்கா ரஸ்யா வை சிக்கலுக்கு உள்ளாகியது.
வல்லரசு நாடுகளின் சூழ்ச்சி 
சவூதி அரேபியாவின் எண்ணெய்  வளத்தை சுரண்ட அதனை கைப்பற்றும் முடிவை அமெரிக்கா எடுத்தது.அப்போதைய சவூதி ரியாத் அமெரிக்காவுடன் நட்புறவை பேணா நினைத்தார் இதன்படி சவூதி அமெரிக்காவிற்கு ஆதரவு தந்தது அதனாலதான் இன்று வரை சவூதி எண்ணை உற்பத்தியில் இன்று வரை முதல் இடத்தில உள்ளது.சவுதியில் மன்னராட்சி முறை நடைபெறுவதால் மன்னரே எல்லா முடிவையும் எடுப்பர் இது அமெரிக்கா ஆதிக்க திட்டம் வெற்றி பெற உதவியது .சவூதியில் மன்னராட்சி முறை
என்பதால் மன்னர் எடுக்கும் முடிவே இறுதி இதனால் பிற அரசு அதிகாரிகளை கவர அமெரிக்க அரசுக்கு தேவை ஏற்படவில்லை.
பனிப்போர் (cold war )உச்சத்தில் இருந்த காலம் என்பதால் ஈரானிய  அரசு  ரஷ்யாவுடன் நட்பு மேற்கொண்டது.அதனால் அடுத்து ஆதிக்க சக்தியின் கண் ஈராக்கை நோக்கி திரும்பியது சவூதி கு அடுத்த 3ம் இடத்தில் எண்ணெய் உற்பத்தியில் ஈராக் வும் ஸிரியாவும் இருந்தன.தன்னுடன் நட்புறவை மேற்கொண்ட சவுதியின் நிலையை கட்டி இரு நாடுகளிலும் நுழைய பார்த்தது .ஈராக் சனநாயக நாடு என்பதால் அதன் அரசு அதிகாரிகளை அமெரிக்கா விலைக்கு வாங்கி அரசுக்கு எதிராகவே திருப்பியது.அந்நாட்டின் அப்போதைய அதிபர் சதாம் உசேன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை அமெரிக்கா வைத்தது.
அவர் நாட்டில் நியூக்ளியர் ஆயுதங்களை தனது நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ஐ.நா விடம் உசேன் ஒரு தீவிரவாதி அவரை பிடிக்கும் உரிமையை C.I.A விடம் ஒப்படைக்க கேட்டு கொள்ள நாட்டு ராணுவத்தை அவர்களுக்கு எதிராகவே திருப்பி விட்டு சதாம் உசேன் அவைகளை சிறை பிடித்தனர் .இதற்கு முன்னேரே நாட்டின் நிலவரத்தை கருத்தில் கொண்டு 2003ல் அதிபர் பதவியில் இருந்து விலகினார்.இதனால் 2006ல் சட்டம் உசேனை தூக்கில் போட்டனர்.ஆனால் ஒரு ஆயுதம் கூட ஈராக் இடம்மிருந்து இன்று வரை கைப்பற்றவில்லை.
2011
அரபு ஸ்பிரிங்கின் துனிசியா வெற்றியால் பல அரபு நாடுகள் எழுச்சி பெற்றது .அரபு புரட்சி மக்கள் சமூக வலை தளங்களால் இணைந்து ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக போராடி வெற்றி பெற்றது.
அமெரிக்கா சிரியாவில் செய்தது போன்றே அரசு அதிகாரிகளுக்கு பணத்தை காட்டி அதிபர் பஷார் அல் -ஆசாத் கு எதிராக திருப்ப அவர்கள் அதிபருக்கு எதிராக போராட துவங்கினர்.சிரியா வை அமெரிக்கா தீவிரவாத நாடக அறிவித்தது.பிறகு அமெரிக்க ராணுவங்கள் கிளர்ச்சியாளர்க்கு ஆதரவாக போரிட போவதாக கூறி நாட்டை துவம்சம் செய்ய முயற்சிகளை மேற்கொள்ள.ஐசிஸ் இஸ்லாமியம் இஸ்லாம் நாடுகளுக்கே வேறு நாடுகள் தலை இட கூடாது என்று கூறி.அமெரிக்காவிற்கு எதிராக போர் செய்ய துவங்கியது.சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்து அரசு சார்பாக போராடுகிறது.ஐசிஸ் யார் எதிரி என்றே தெரியாமல் ரஷ்யா அமெரிக்க இரண்டு ராணுவங்கள் இரண்டையும் தாக்கி வருகிறது.2014ல் போரை நிறுத்த UNO உத்தரவிட்டது.அனால் மறுபடியும் இந்த போர் எழுச்சி பெற்றது .
ஆயுத கலாச்சாரம் 
இந்த போரில் கெமிக்கல் வெடி குண்டுகள் அதிகம் பயன்படுத்த படுகிறது.கிளர்ச்சியாளர்களின் இடம் தெரியாததால் ராணுவம் மக்கள் குடியிருப்புகளிலே வெடிகுண்டுகளை வீசி செல்கிறது.எல்லை பகுதியில் சிறு அசைவு ஏற்பட்டாலும் துப்பாக்கி சூடு நடத்தப்படும்.ஹெலி கொப்டர்கள் வெடி குண்டு மழையை இட்டு செல்லும்.
இதனால் பல மக்கள் பாதிக்க பட்டனர் இன்றும் பாதிக்க படுகின்றனர்.இதனால் பல அகதிகள் நாட்டை விட்டு சென்றனர்.புலம் பெயருபோதும் பல மக்கள் உணவின்றி இறந்தனர்.ஒரு குழந்தை கடற் கரையில் இறந்து கிடந்த கட்சியை கண்டு நாம் கண்ணீர் சிந்தியதை மறக்க முடியுமா?

உலக நாடுகளின் பங்களிப்பு 
நீலம் -சிரியா அரசை ஆதரிப்போர் 
பச்சை-போராளிகளுக்கு ஆதரவு 
மஞ்சள்--பிளவு பட்ட ஆதரவு 
இறப்புகள் 
2014 கணக்கெடுப்பின் படி 1,91,369 பேர் இறந்துள்ளனர்.3,00,000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.அதே அளவு மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளி ஏறினார்.
பனி போர் 
உலக அரசியல் விமர்சகர்கள் இது ரஷ்யா அமெரிக்கா இடையே யானா பனி போர் அதற்காக சிரியா வை பயன்படுத்திக் கொள்கின்றன என்கின்றனர்.சுருக்கமாக மொத்தத்தில் சிரியா வில் உள்ள எண்ணெய் வளம் யாருக்கு என்பதே இந்த போர் .
அமெரிக்காவின் சூழ்ச்சியால்தான் சிரிய உள்நாட்டு போர் உருவானது.போட்டி போட்டு கொண்டு ரஸ்யா அமெரிக்கா எண்ணெய் வளத்திற்காக மனித வளத்தை வெட்டியசைக்கிறது.
2018
வருட தொடக்கத்திலேயே மறுபடியும் போரை தொடங்க அதனால் மார்ச் 1 வரை ஆயிரம் பேர் இறப்பை சந்தித்துள்ளனர் .
இன்றைய சிரியா நிலை