திங்கள், 7 மே, 2018

போர்


2019 
2018 இறுதியில் பாரிஸில் உலக அறிவியலாளர்கள் ஸ்டீபன் ஹவ்க்கிங்கின் train கோட்பாட்டை இயக்க முடிவெடுத்தனர்.ஐ. நா வும் இதற்கு அனுமதி அளித்தது.அதற்காக உலகை சுற்றி தண்டவாளம்
அமைக்க உலக நாடுகளின் அரசுகளும் ஒப்பு கொண்டன. 

வெள்ளை மாளிகை ,வாஷிங்க்டன் டீ.சி 
டிரம்ப் வைட் ஹவுஸ் வாயிலில் நடந்து வந்து கொண்டிருந்தார் அவர் மனைவி மெலனியா டிரம்ப் காதோரமாக சென்று"people's waiting" என்றார். அவர் சொன்னதை கேட்டவுடன் தன் வேகத்தை முன்பு நடந்ததை விட குறைத்து நடந்தார்.எதிரில் டிரம்ப் மகன் டொனால்ட் வந்து கட்டி அணைத்தார். "ப்ரெசிடெண்ட் உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் எப்போவுமே ஒருத்தங்க உன் கிட்ட கட்டளை போட்ட அது நல்லதா இருந்தாலும் ஒத்துக்கதான்னு சொல்லுவீங்க இப்போ எப்படி இவ்ளோ பெரிய அக்ரீமெண்ட்க்கு சம்மதிச்சிங்க"
"son, 'i'm almost honest to be a politician" என்று கூறி நடந்தார் டொனால்ட் கண்ணில் ஒரு கர்வ பார்வை. தனது கையை அசைத்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்தார் வெள்ளை மளிகை முன்பு கேள்வி கணைகள் நாணில் தொடுக்கபட்டன முதலில் ஒரு பத்திரிக்கையாளர் "உங்களுக்கும் play boy மாடல் சீண்ட............" அவரை டிரம்ப் இடைமறித்து
"நீங்க பிரஸ் மென்னா இல்ல பப்லிஷ் மென்னா" என கேட்டார் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரித்தனர்.இன்னொரு பெண் சி.என்.என் பத்திரிகையாளர் "உலகத்துல பஞ்சம் பட்னி நிறைந்துருக்கற இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய அறிவியல் ப்ராஜெக்ட் தேவையா அத பத்தி சாதாரண மக்களுக்கு புரியற மாரி சொல்லுங்க"
"அதாவது...... (இருமிவிட்டு) ஒரு நிமிஷம் மெலனியா சொல்லுவாங்க" என கூறி டிரம்ப் நழுவினர்.
"உலகத்தை சுற்றி ஒரு தண்டவாளம் அமைக்கப்படும் கடல்,ஆறு,எரிமலை இது எல்லாத்துக்கும் அந்தந்த இடத்திற்கேற்ப இப்போ கடல்னா மிக பெரிய தூண் மூலம் இல்ல மிதக்கும் பாலம் மூலம் தண்டவாளம் அமைக்க படும் இதல்லாம் எதுக்குன்னா எல்லாத்துக்கும் தெரியும் மற்றவரை தன் அறிவின் மூலம் ஊனம் என நினைக்க வைத்த ஹாவ்க்கிங் இறந்துட்டாரு அவரோட தியரி சாத்தியமானு பாக்காத இந்த ப்ராஜெக்ட் ஏனா நாம அறிவியல் மூலம் வளர்ந்தா கண்டிப்பா சமூகமும் மலரும் இந்த தண்டவாளத்துல ஒளியை ஒத்த வேகம் உடைய ட்ரெயின் ஓடும் எத்தனை நாள்னா ட்ரைன்ல பயணிக்கறவங்க ஒரு நாள் ஆயிருச்சுங்கறதா உணரும் வரைக்கும் அவரோட தியரி படி இந்த மாறி ஒரு ட்ரெயின் உள்ள இருப்பவர்கள் ஏழு நாள் ஆயிருச்சுன்னு நினைக்கும் வரைக்கு ஓடும்போது அவங்கள பொறுத்தவரை அது ஏழு நாள் தா ஆனா அவங்க வெளிய வந்து பாக்கும் போது 100 வருஷம் ஆயிருக்கும் இதுக்கு பேரு .........." மைக்கை டிரம்ப் இடைமறித்து "இதுக்கு பேர் ஸ்டீபன் ட்ரெயின் தியரி இதன் படி 15 வருசத்துக்கு இந்த ட்ரெயின் ஓடும் இன்னொரு நல்லதுன்னா இது தோல்வி அடைஞ்சா கொண்டுபோக முடியாத இடத்துக்கும் ஏழை மக்களுக்கு உணவை கொண்டு போய் சேர்க்க முடியும்" என்றார்.
"சார் நாம இப்போத 430 km/h கொண்ட ட்ரைன கண்டு புடிச்சிருக்கும் அப்போ எப்படி ஒளியை ஒத்த வேகம் சாத்தியமா அப்பறோம் பணம் நிறையவே தேவைப்படுமே " என ஒருவர் கேட்டார் .
"பணத்தை அந்த ட்ரைன்ல பயணிக்கறவங்க இன்வெஸ்ட் பண்ணுவாங்க. இந்த ட்ரைன ஹாவ்க்கிங் இருக்கறப்போவே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க மறக்க வேண்டாம் நாம bicycle அ கண்டு பிடிக்கரக்கு முன்னாடியே ட்ரெயின் ந கண்டறிந்தவர்கள் " என்று கூறி டிரம்ப் நகர்ந்தார். 




ரஷ்யா அரசு அலுவலகம்,மாஸ்கோ
புதின் தனது அதிகார மேஜையை நோக்கி வளாகத்தில் நடந்து கொண்டிருந்தார்.ஒரு சிறுவன் புடினை ஓடிவந்து இடைமறித்தான் காவலர்கள் அவனை தடுக்கவில்லை "நான் ளூசிப்" என்றான் அச்சிறுவன் "நான் வியாதிமிர் புதின் உங்களுக்கு நான் உதவி பண்ணலாமா" என புதின் கேட்டார்.
"நீங்க மக்களின் நலனுக்காகத்தான் போராடுவேன்னு சொல்லியிருக்கீங்க உங்க பிரஸ் மீட் பார்த்தான் இந்த அறிவியல் மூலமா தண்டவாளம் அமைக்கறதால நிறைய இயற்கை வளம் பாதிக்க படும் இது தேவையா மிஸ்டர்.புதின்" 
"நீங்களே சொல்லுங்க எதுக்காக அறிவியல் கண்டுபிடிப்பு சோதனை நடத்தப்படுத்து"
"முதல எல்லாம் ஏகாதிபத்திய நாடுகள் பிற எதிரி நாடுகள அச்சுறுத்த தன் வலிமைய காட்ட அறிவியல் ஆயுத சோதனைகள் மேற்கொண்டங்க இப்போத எல்லோரும் ஒற்றுமையதான இருக்கோம் இது யார அச்சுறுத்த" என அந்த சிறுவன் கேட்டான்.
புதின் அச்சிறுவனின் கண்ணை பார்த்தார் அச்சிறுவன் உயரத்திற்கேற்ப முட்டியிட்டர் தன் உதட்டின் மேல் விரல்களால் தடவி கூறினார் "இந்த பிரபஞ்சத்துல நாம மட்டும் இல்லப்பா" .





1952,ஸ்விட்சர்லாந்து,பேர்ன் 
இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜார்ஜ் Ostermundigen நகர பாதாள அறையில் நடந்து கொண்டிருந்தார் ஒரு கதவு பச்சை நிறத்தில் மின்னியது அக்கதவருகே சென்றார் அங்கே கைரேகை உணர்வின் மேல் தனது கையை பதித்தார். அந்த இருட்டான அறையில் மிஸ்டர். பிரைன் மிஸ்டர். பிரைன் என தன் கையை தட்ட இருட்டிலிருந்து ஒரு சேமியா மண்டை எட்டி பார்த்து "என்னை அப்படி கூப்பிடாதிங்கனு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் ஜார்ஜ்" என்று சொல்லி விளக்குகளை எரியவிட்டார் ஐன்ஸ்டீன்.
"ப்ராஜெக்ட் எல்லாம் சரியா போகுதா" என கேட்டார் அரசர் ஜார்ஜ்.
"நீங்க உலக ஏகாதிபத்தியத்தை உங்க கைல வெச்சு இருக்கீங்க இருந்தாலும் உலக அமைதி ன்னு சொன்ன வார்த்தைக்காக ஜார்ஜ் உங்களுக்காக இந்த ப்ராஜெக்ட்க்கு ஒத்துக்கிட்டேன்"
"கவலை வேண்டாம் ஆல்பர்ட் இங்கிலாந்த நம்பி தாராளமா தரலாம்" என்றார் ஜார்ஜ்.
"இங்கிலாந்த நம்பி இல்ல உங்கள நம்பி" என்று கூறி மெதுவாக எழுந்தார் ஐன்ஸ்டீன்.அந்த அறையின் ஒரு மூலையில் சென்றார் அங்கே சுவற்றை தட்டினார். அந்த சுவரு கதவு போல் திறந்தது. நீல நிற வெளிச்சம் அந்த அறையில் பரவி இருந்தது. அந்த அறையின் நடுவில் ஒரு பிரம்மாண்ட கருங்குழி மிதந்து கொண்டிருந்தது. 20 விஞ்ஞானிகள் அந்த அறையில் அங்கும் இங்கும் உழன்று கொண்டிருந்தனர்.ஒரு பெண் ஐன்ஸ்டீனிடம் வந்து "சார் ஈர்ப்பு விசையை இன்னும் கொறைச்சிருக்கோம்" என்றார். "ஈர்ப்பு" என சந்தேகத்துடன் கேட்டார் ஜார்ஜ்."கிங் ஜார்ஜ் சாதாரண மாவே கருந்துளைகள் தன்னை சுற்றி உள்ள பொருளை தனக்குள்ள ஈர்த்துக்கொள்ளும் நாம ஒரு செயற்கை கருந்துளையை உருவக்கோரம் அத நுண்ணியதா உருவாக்கும்போதே ஏற்பு விசையை குறைச்சா நமக்கு நல்லது" என்றார் ஐன்ஸ்டீன்.
"நாம டைம் மெஷின் பற்றி பேசும்போதே நினைச்ச எதுக்கு கருந்துளை" 
"ஜார்ஜ்,டைம் ட்ராவல் பண்ண மூணு வழிதான் அடிப்படை ஒன்னு டைம் மெஷின்,ஒளியை விட வேகம், கருந்துளை. டைம் மெஷின்லயே நிறையா தியரி இருக்கு நாம பண்றது கருந்துளை மூலமா டைம் மெஷின்,ஒளியை விட வேகம் எவ்வளவு சுலபம்னு தெரியல ஆனா கருந்துளை நம்மள சுற்றி இருக்கு ஆனா மிக நுண்ணிய அளவுல இருக்கு ஒரு கருந்துளை பக்கத்துல இருக்கற இன்னொரு கருந்துளை ஈர்க்கும் இப்படி ஒவ்வொன்னும் இன்னொன்னு ஈர்க்கறப்போ அது ஒரு பெரிய கருந்துளையை உருவாக்கும் ஆனா இதல்லாம் தான நடக்காது நாம நடத்தணும் நீங்க டைம்னு சொன்னப்ப எனக்கு கருந்துளை தான் ஞாபகம் வந்தது. ஆனா நம்மள சுற்றியுள்ள கருந்துளை எவ்வளவு நுண்ணியதுன்னு தெரியல கருந்துளை இறந்த நட்சரத்துல இருந்து உருவாகும் அது எப்படி பூமிலனு தெரியல நம்மக்கு பின்னாடி வரவங்க கண்டறியலாம் இப்போதைக்கு இதோட ஈர்ப்புவிசை உங்க காலுக்கு கீழ தெரியுதே இந்த 60 அடி சிவப்புக்கோடு இதுக்கு மேல உங்க சுண்டு விரல் போனாலும் உங்கள உள்ள இழுத்துரும் ஆனா கட்டுப்பாட்டுல வைக்க 5 வருஷம் ஆகும்.காலப்பயணம் சாத்தியம்"என்றார் சிரித்துக்கொண்டே சேமியா மண்டை.
"நீங்க சொல்றது பாதிதான் புரிஞ்சுது.... அது சரி ஸ்டாலின் அயர்ன் ரன் இன்னும் சகாலை இன்னும் சகாலைனு புலம்பரராம சோவியத் இரட்டை உளவாளி ஒருத்தர் சொன்னாரு"
"சொல்லிதான் தெரியனுமா, அவர் மனது அளவுல நிறைய பாதிக்கப்பட்டுஇருக்காரு காரணமே நீங்கதான.ஒருவேளை அவர் சொல்றதும் உண்மையா இருக்கலாம்".
"அயர்ன் ரன் பத்தி பேசும் போது ஒரு சம்பவம் ஞாபகம் வருது 10 வருசத்துக்கு முன்னாடி 1942ல ஜெர்மன் இரட்டை உளவாளி ஒருத்தன் பிணம் நம்மகிட்ட வந்துச்சு அவன் கை ஒரு காகிதத்தை இறுக்கி பிடிச்சிருந்தான் அதுல அவன் மரணத்தோட கடைசி நொடிகள் இருந்துச்சு என்ன இருந்துச்சுனு தெரியுமா பிரைன்"
"என்ன ஜார்ஜ்..."
"அது நாஜியோட எனிக்மா கோட் சீக்ரெட் கோட் அத ஆலன் டூரிங் கம்ப்யூட்டர் மூலம் உடைச்சு பார்த்தோம் அந்த இரட்டை உளவாளி அயர்ன் ரன் தனியா இருக்கும்போது அவர் தலைல துப்பாக்கிய வச்சிருக்கான்"
"wolf தலைலயா"
"ஆமா wolf தலைல கன்னவச்சு கேட்ருக்கான் நீதான் உலகத்துக்கே தலைவன்னு நினைச்சுட்டு இருக்கியா உன்ன இப்போ கொல்லப்போறேன் சொல்லு அமெரிக்கா வாழ்கன்னு சொல்லுன்னு கேட்டு இருக்கான் இந்த உலகத்துல நீமட்டும் இல்லன்னு தெரிஞ்சுக்கோ அப்டினும் சொல்லியிருக்கான் அதுக்கு wolfஇந்த உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியுமா நீ என்ன எதிரியா நினைக்கிற காரணம் உன் அரசன் எதிரியா பாக்க சொல்லி இருக்கான்.குடும்பத்தை உன் உலகமாக்கி
உன் வேலைய வாழ்க்கையாக்கி இனம் நாடு மொழிய உன் கடவுளாக்கி உன்ன ஏமாத்திட்டு இருக்காங்க உண்மையை சொல்ல போன இந்த பிரபஞ்சத்துல நாம மட்டும் இல்லப்பா ன்னு சொல்லியிருக்காரு" என்றார் ஜார்ஜ்.
"சரியாதா சொல்லி இருக்காரு" என்றார் சேமியா மண்டை.





2026,அமெரிக்கா,நியூ யார்க் 
பிப்ரவரி 25, 2.30 pm
பத்திரிக்கையாளர்களும் மக்களும் அந்த பிரம்மாண்ட ரயில் நிலையத்தில் கூடி இருந்தனர்.பலர் எதிர்ப்பும் பலர் ஆதரவு ஒலியையும் எழுப்பினர்.தலைமை ஆராய்ச்சியாளர் மிலா டெமிர் மக்களிடம் மைக் ஏதும் இல்லாமல் பேச துவங்கினார் ஆனால் அது நவீன தொழிநுட்பம் மூலம் அந்த அரங்கம் முழுதும் எதிரொலித்தது."இங்கு அமர்ந்திருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி,ரஷ்ய அதிபர்,சீனா ஜப்பான் கொரியா அதிபர்களுக்கும் மற்றும் பல நாட்டை சேர்ந்த அதிபர் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும், இங்கிலாந்து அரசருக்கும் மதிப்பிற்குரிய மக்களுக்கும் வணக்கம். இன்று ஆப்ரிக்கா மற்றும் சில ஆசிய பகுதியில் மக்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதை கேள்விப்பட்டோம் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.இன்றைய ஆராய்ச்சியில் இது முழுமையை எட்டவில்லை. அவர் தியரி படி செகண்டுக்கு 7 முறை உலகை சுற்ற வேண்டும் ஆனால் இது ஒருமுறைதான் சுற்றும் இது தோல்வி அடைய வாய்ப்பில்லை அடைஞ்ச மக்களுக்கு பெரிய அளவுல உதவியா இருக்கும். இத பத்தி முன்னரே அறிக்கை வெளியிட்டாச்சு இது இன்னும் ஆறு நிமிடத்தில் தொடங்கிரும். இதோட பாதை அமெரிக்கா, பசிபிக், நைஜீரியா, எத்தியோப்பியா, இந்தியா tn ,மலேசியா, பசிபிக்,அமெரிக்கா அதிபர்கள் கொடி அசைத்து துவங்கி வைக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறது. 
10. ..9. ..8. ..7. ...6. ...5. ..4. ..3. ..2. .1. ...ட்ரெயின் ஸ்- 34 கிளம்பியது அதன் நடவடிக்கையை கணினி அறிவித்தது. "வேகம் 300000 m/s வேகம் அதிகரிக்கறது இப்போது 1000000 m/s இப்போது 199237452 m/s 
இப்போது முழுவேகம் 221453387 m/s உலகத்தை ஒருமுறை சுற்றியது ஒரு வினாடி
உலகத்தை இருமுறை சுற்றியது 1.53 வினாடி 
உலகத்தை மூன்று முறை 2.23 வினாடி 
உலகத்தை நான் முறை 3.02 வினாடி 
..................................................................
....................................................................................
.......................................................................
.......................................................................
...........................................................................
.........................................................................
.........................................................................
..................................................................................
...............................................................................
உலகை 1030வது முறை .................



1952,இங்கிலாந்து
பிப்ரவரி 25,8.00 am 
இங்கிலாந்து அரசர் ஆறாம் ஜார்ஜ் இன் ஈம சடங்கு நடந்து கொண்டிருந்தது. ஐன்ஸ்டீன் சடங்கில் கலந்து விட்டு பெர்ன் நகர ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றார் .உள்ளே நுழைந்தவுடன் அஸிஸ்டண்ட்கள் கேட்டனர் "அடுத்த அரசர் யார் சார் இந்த ஆராய்ச்சியை தொடர முடியுமா" "இனி ஆராய்ச்சியை தொடர முடியாது அடுத்த அரசி எலிசபத் உடனே ப்ளாக் ஹோல் அழிச்சிருங்க சீக்கிரம். ...சீக்கிரம்" என கத்தினார் ஐன்ஸ்டீன் அஸிஸ்டண்ட்கள் அவசர அவசரமாக பேக் செய்தனர். "முக்கிய பொருளை மட்டும் எடுங்க இத தகர்க்க போறோம்" என கத்தினார் ஒருவர். ஐன்ஸ்டீன் ஒரு சைனை கீழே விட்டு விட்டார் திடிரென அது கருந்துளையை நோக்கி சென்றது ஐன்ஸ்டீன் திடுக்கிட்டார்.அந்த இடத்தில் பலத்த காற்று அனைத்து பொருளையும் அக்கருந்துளை ஈர்த்தது அனைவரும் அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்க பட்டனர்."என்ன ஆச்சுன்னு தெரியல எல்லாரும் வெளிய போங்க வெளிய போங்க என கத்தினார்.அனைவரும் கஷ்டப்பட்டு வெளியேறினர். 


2026,அமெரிக்கா,நியூ யார்க் 
பிப்ரவரி 25, 3.02 pm
ஒவ்வொரு நாட்டில் உள்ளவரும் அந்த ரயில் போவதை வினாடிக்கு ஒருமுறை பார்த்தனர். கன்னியாகுமரியில் ஒவ்வொரு முறை ட்ரெயின் கடக்கும் போது கூச்சல் ஆரவாரம் அரைமணி நேரம் ஆகியும் ஓயவில்லை திடீரென அடுத்த நொடி அந்த ரயிலை கன்னியாகுமரியில் காணவில்லை சொல்ல போனால் எங்கும் காணவில்லை அது மாயமானது.
1033 ......... புதினிடம் "சார் எதோ பிரச்சனை" என்றார் மிலா டெமிர்
"என்ன..." என கேட்டார் ஓவென்
"தெரியல ஆனா ட்ரைன காணோம்"
அனைவரும் அதிர்ந்தனர். 

திடிரென அனைவர் கண்ணுக்கு முன்னும் ஒளிப்பிழம்பு தெரிந்தது அது டிரம்ப் கண்ணுக்கு புதின் கண்ணுக்கு கிம் கண்ணுக்கு ஐன்ஸ்டீன் கண்ணுக்கு 2019 மக்கள் கண்ணுக்கு 1952 மக்கள் கண்ணுக்கு இன்னொரு கண்ணாடி போன்ற பிம்பமும் தெரிந்தது. ஹாவ்க்கிங்காலும் ஐன்ஸ்டீனாலும் 1952, 2019 ஒரே உலகமாய் சங்கமித்தது மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 
மிலாடிமிர் "cloverfield " என முணுமுணுத்தார். 



-தொடரும்..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக