திங்கள், 14 மே, 2018

பிரித்தாள்

மலரே மலராதே:

   கி.பி.1872
                தண்ணீர் வற்றிய தென்னை மரங்கள் காய்ந்து கிடக்கும் மரங்கள் அதனூடே பனிப்போல் படர்ந்திருக்கும் குடிசைகள்.வடக்கு நோக்கி
செல்ல கிளை வடிவிலான தெருக்கள் அலங்கோலமாய் அடுக்கி வைத்தாற்ப்போல் இருக்கும் குடிசைகள்.அதில் ஓர் குடிசையில் இடைவிடா அழுக்குரல்
“பார்த்து வளத்த பொண்ணு சமைஞ்சுட்டான்னு சந்தோசபடறதா இல்ல பாழப்போன ஊர்ல பொண்ணா பொறந்துட்டான்னு தலைய இடிச்சுக்கறதா”
என ஓரு மதிக்கத்தக்க தாய் அழுதுக்கொண்டிருக்க “என்ன முனகல் சத்தம் வெளிய வரைக்கும் கேக்குது” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள் மாராப்
பை சரிசெய்து அவள் அருகே சம்மனமிட்டு அமர்ந்தாள்.பிறை நிலா போன்ற நெற்றியை உடையவள் அவள் பதுமை என்ற சொல்லிற்கு உரித்தானவள்
நாங்கிலி என்ற பெயரை உடையவள். “இப்ப என்ன ஆச்சு பொண்ணு சமைஞ்சுட்டா அவ்ளோதான இனிமே நா பாத்துக்குறன்  நீங்க பயப்படாதீங்க நீங்க நனைக்கற
மாறி ஒன்னும் நடக்காது”.என்று ஆறுதல் படுத்தி எதிர் மூலையில் இருக்கும் வேதாகியை பார்த்தாள்.அதிகாலை வேளையில் புதிதாய் மலர்ந்த மலர் போலே
இப்போதே பூத்த பூ போல அமர்ந்திருந்தாள்வேதாகி கரிய நிற உதடுகளை உடையவள் கருப்பு அழகுகளை உடையவள். ஊரையே தன் வாயால் விற்று
விடுவாள் அந்த அளவிற்கு வாயாடி.யாரா இருந்தாலும் எதிர்த்து பேசும் துணிச்சல் உடையவள்.“அந்த இராட்சஸ பயலுகள நனைச்சாத பயம் வருது”
என வேதாகியின் தாய் கூறினாள்.அது தாழ்த்தப்பட்ட ஆண்கள் மீசை வளர்ப்பதற்கும் பெண்கள் மார்பை மறைப்பதற்கும் வரி கட்ட பணிக்கப்பட்ட
கொடூர பூமி திருவிதாங்கூர் சமஸ்தானம்இகேத்தலா வட்டம்.போருக்காக இராணுவ செலவுகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வரி சுமத்தப்பட்டது.
சோற்றை கஞ்சி என்றும் வீட்டை குடிசை என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டனர்.எதற்கெடுத்தாலும் வரி கட்ட வற்புறுத்தப்பட்டனர்.
 அத்தகைய இரத்த பூமியிலே நாம்  பயணிக்கப்போகிறோம்.

முட்களின் நடுவே ரோஜா:

                   திருவிதாங்கூர் சமஸ்தானம் முக்கால்பங்கு பச்சைபசேல் என இருக்கும் தென்னை தோட்டங்களையும் அதன் நடுவே செம்மண்
 குடிசைகளால் அமைக்கப்பட்ட சாலைகள் என காட்சியளிக்கும்.அது தனது பெருவருவாயை தென்னை தோட்டங்கள் மூலமே ஈட்டுகிறது அதில் காய்க்கும்
 காய்களை பிரிட்டிஷ்  கம்பெனியிடம் விற்கிறது.பின் மீனவர்கள் உழைப்பை சுரண்டி வாழ்கிறது தென்னை மரங்களின் நடுவே நிலத்தில் உப்பை பரப்பி
 அதில் ஒருவனை மண்டியிட வைத்து சாட்டையால் அடித்து பின்வருவனவற்றை கூற செய்தனர். “ம் சொல்லு உப்புக்கு ஆயம் கட்டறேனு சொல்லு”
 அதற்கு அம்மனிதனும் “கட்றேன் கட்றேன்” என கதறினான்.இதையெல்லாம்ஒர் மேட்டினின்று அமர்ந்து ஒருவன் பார்த்துக்கொண்டிருக்க பின்னால்
 நால்வர் விளையாடிக்கொண்டிருந்தனர்.அந்த ஐ;வரே சமஸ்தானத்தின் அரசனின் மகன்கள்பதின் பருவம் அடைந்தவர்கள்;.அரசனின் மகன் என்று கர்வம்
 கொண்டவர்கள் பெண்களை தொந்தரவு செய்வதையே வாடிக்கையாக கொண்டவர்கள்.இவர்களின்விளையாட்டே மற்றவர்களை தொந்தரவு செய்வது.
அதில் ஒருவன் மட்டுமே விதிவிலக்கு தன் தாயை தவிர மற்ற பெண்களுடன் பேச தெரியாதவன்இபெண்களைஏறெடுத்துக்கூட பார்க்காதவன்இ
 பொய் பேச தெரியாதவன்இ தர்மத்தின் வழி நடப்பவன் சுருக்கமாக கூறின் முட்கள் நடுவே பூத்த ரோஜா அவன்.அவன் பெயர்விபி.பதினெட்டு வயதுடையவன்
விபியை எப்பொழுதும் அவன் சகோதரர்கள் அவனை தங்களைப் போலவே வாழவேண்டும் என கட்டாயப்படுத்தினர்.விபி அவர்களில் இருந்து பிரிந்தே
இருந்தான்.திருவிதாங்கூர் சமஸ்தானம் பிரிட்டிசாரின் கீழ் செயல்படும் ஒர் குறு சமஸ்தானம்.அந்த பிரம்மாண்ட சமஸ்தானத்தில் விபிக்கு துணை அவன்
தாயே.அவன் தாயின் மடியே அவன் உலகம்.வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.தெருவெல்லாம் பெண்கள் மாராப்பு
இன்றி மார்பை மறைக்காமல் தெருவில் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.பல ஆண்கள் சட்டையின்றி முகத்தில் மீசை தாடி இல்லாமல் தேங்காய்
ஓட்டை கவுத்தார்ப் போல் தலை மயிரை வைத்திருந்தனர்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டே விபியின் கால்கள் சமஸ்தானத்தை நோக்கி
விரைந்தன.

காதல் மலர்ந்தது:

                       “பறவைகளும் மனிதர்களும் ஒரு சேர வேலை செல்லும் நேரம் கதிரவன் துயிலெழுந்து உயிர்களை எழுப்பிய நேரம்
இலைகளிலும் புற்களிலும் பனிபடர  பூக்கள் பூத்த நேரம் படுக்கையில் பல் துலக்கா இதழ்கள் ஓன்றையொன்று சுவைத்துக்கொள்ளும் காலை நேரத்தில்”
 வேதாகியின் வீட்டின் வெளியே சத்தம்  “ஏ என்னடி பண்ற நேரமாச்சு வெறசா வா” என நாங்கிலிவீட்டின் வெளியே நின்றுக்கொண்டு வேதாகியை
அவசரப்படுத்தினாள். “இதோ வந்துட்டேன்க்கா” என்று வெளியே வந்தாள் நாவற் பழ நிற உதட்டை உடைய வேதாகி
“ஏன்டி வெறசா கிளம்பி வர தெரியாதாடி உன்னால எப்பவும் மீசைக்காரன் கிட்ட உன்னால திட்டு வாங்கவேண்டியிருக்கு”
“என்னக்கா பண்ண சொல்ற காலைல எழுந்து தோட்டத்துக்கு போயி மீசைக்காரன்கிட்ட திட்டு வாங்கி தேங்காயை உரிச்சு போட்டு அத
வண்டில ஏத்தி பொருக்கி பசங்ககிட்ட இருந்து தப்பிச்சு உன்னோட மாமாவோட கொஞ்சல்லாம் பாத்துட்டு மறுபடியும் மண்டிலயே
மத்தியம்பூறா உக்காந்துட்டு அந்த சிரிக்கக பேச்சயெல்லாம் சமாளிச்சுட்டு வீட்டுக்கு வந்தா அம்மா அடுத்த வீட்டுக்கு வாக்கப்படப் போறவ
இன்னும் சமைக்க தெரியல உனக்கு மாமானுக வேற இல்ல நீயெல்லாம் எப்படி பொழப்பு நடத்தப்போறீயோன்னு கேட்க என்னை
தேடி இராஜ குமாரன்லாம் வருவான்னு நா சொல்ல ம் வருவான் வருவான்னு அம்மா சொல்ல”
“ம் போதும் போதும் நிறுத்துடி வாயாடி வா போலாம்”என நாங்கிலி  கூறினாள.;         
தென்னை தோட்டத்தில்:
         நாங்கிலி வேதாகியை விட்டு சிறிது தூரம் தள்ளி தேங்காய்களை அள்ளி போட்டுக்கொண்டிருந்தாள்.வேதாகி தன் பிராயத்து
 பெண்களுடன் வேலை செய்துக்கொண்டிருந்தாள்.விபியும் அவனது சகோக்களும் மண்டியை சுற்றிக்கொண்டிருந்தனர்.வேதாகி வேலை செய்து
கொண்டிருந்த இடத்திற்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தான்.கதிரவனும் நிலவும் சந்தித்தாற்போன்று வேதாகியின் கடைவிழி விபியின் கண்களை
சந்தித்தது விபி சட்டென தரையை பார்த்தான் வேதாகியும் சட்டென திரும்பிக்கொண்டாள்.விபிக்குள் ஏதோவொரு மாற்றம் வயிற்றில் புயல்
அடித்தாற்போன்று ஓர் உணர்வு அவன் கண்கள் அவனையே அறியாமல் அவளை தேடியது.அவளை பார்க்க அவன் கண்கள் ஏங்க அவன்
அவளை பார்க்க தொடங்கினான்.வேதாகி அருகில் இருந்தவள் அவள் காதில் “அந்த கொடூரன் உன்ன பாத்துட்ருக்கறான் பாத்து” என்றாள்.
தப்பி தவறி பாத்து தொலைச்சுட்டமோ என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.வேதாகியின் கைகள் அவள் மாராப்பை மறைத்தது அவள்
மாராப்பு இன்றி தவிப்பதை அவன் கண்களால் பார்க்க முடியவில்லை அவன் கால்கள் அவளை நாட துடித்தன அவன் உதடுகள் அவளுடன்
பேச துடித்தன.விபி வேதாவின் அருகில் சென்றான் அவனையே அறியாமல் அதை கண்ட மற்றோர் வேதாவைவிட்டு விலகி சென்றனர் விபி
அருகே வரவர அவள் மனதில் எண்ண ஓட்டங்கள் நாம இந்த கொடூரன் கைல மாட்றக்கு நாமலே இறப்பை தேடிக்கலாமே ஆனா நம்ம
இறப்பு நம்ம கைல இல்லயே அதுவும் கொடூரமால்ல இருக்கும் என்று அவள் நினைப்பதற்குள் அவன் அருகே வந்துவிட்டான் அவன்
கைகள் அவள் மாராப்பு அருகே சென்றது அவள் கண்களை பொத்திக்கொண்டாள்.விபி வேதாவின் மாராப்பை மூடிவிட்டு “நீ ரொம்ப
அழகா இருக்க” என்று கூறிவிட்டு ஓடிவிட்டான்.
இது காதலா?:
          “ஏ சீக்கீரம் சாப்டுவுடுடீ” என வேதாகியின் தாய் சத்தமிட்டாள்
“ஆ… பசியில்ல நா சாப்பிடல” “என்னதா பசியில்லயோ வேலைக்கு போறவளுக்கு”.வேதா மனதிற்குள் எதுக்கு அவன் வந்தான் எதுக்கு
அப்படி பண்ணனும் நா அழகா இருக்கனா “அம்மா நா அழகா இருக்கனா” “உனக்கு என்னடி குறைச்சல் மகாராணி கணக்கா இருக்க”
“பொய் சொல்லாதம்மா”.எல்லாரும் நம்மல கருமி கருமின்னுதானே சொல்லுவாங்க இவன் இப்படி சொல்றான் என சுவரோரம் சாய்ந்துக்
கொண்டு சிந்தித்து கொண்டிருந்தாள் தூங்காமல் இரவை கழித்தாள் இரா முழுதும் விபியின் நினைப்பு அவளுக்கு.
பிறப்பெடுத்த இடத்தில் தலை வைத்து படுத்திருந்தான் விபி தாயின் மடியில் அவ அவ்ளோ அழகில்ல ஆனா நம்ம கண்ணுக்கு மட்டும்
அத்தன அழகா தெரியறா நம்ம அம்மாவைவிட அழகா தெரியறா “அம்மா உனக்கு அப்பாவை பிடிக்குமா?” “அந்த கேள்விலாம் 
உனக்கு எதுக்குடா”என அதட்டினாள் விபியின் தாய். “சரி ஏ மடியில படுத்தது போதும் இன்னொருத்தி மடியில எப்ப படுக்கப்போற”
“இப்படியெல்லாம் நீ பேசுனா எழுந்து போயிருவம்மா” என கூறினான் விபி.என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நம்ம உடல்ல
ஊள்ளத்துல புதிதாய் ஓர் மாற்றம் அம்மா சொன்ன கதைகள்ல வர மாதிரியே நமக்கு ஆகுதே இதுதான் காதலோ என சிந்தித்தான்
விபி.

விபியும் வேதாவும்:

                       காலை விடியலை எண்ணி விபியின் மனம் அலைந்தது மரங்களினூடே கதிர்களை பரப்பி வீடுகளின்
வாசலை எட்டி பார்க்கும் பெண் போன்று அங்கங்களால் ஜொலிக்கும் செந்நிற வேந்தனை எதிர் நோக்கி விபியின் கண்கள் அலைந்தது
விடிந்ததும் அவன் கால்கள் தோட்டத்தை நோக்கியே நகர்ந்தது அங்கே வேதாகி பலருடன் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாள் அவன்
கண்கள் வேதாவை பார்க்க வேதாவின் கண்களும் விபியின் பார்வையும் ஓன்றையொன்று சீண்டின்.விபி வேதாவையே பார்த்துக்
கொண்டிருந்தான் யாரும் பார்க்காதவாறு தொலைவில் இருந்துக்கொண்டு விபி தன்னை பார்பதை அறிந்து வேதாவிற்கு ஓரே
மகிழ்ச்சி உள்ளுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறந்தது மதியம் எப்படி வந்தது என்றே தெரியவில்லை நேரம் வேகமாக ஓடியது
அனைவரும் சாப்பிட சென்றபோது தீடீரென வேதா விபி பார்வையில் இருந்து தப்பினாள்.சுற்றும் முற்றும் பார்த்தான் பின்னாலிருந்து
ஓர் குரல் “என்ன ஏ அப்படி பாக்குறீங்க” விபி திடுக்கிட்டு திரும்பி பார்த்தான் பின்னால் வேதா “ஏ ஏன் இப்படி பயமுறுத்தற”
“இல்ல நீங்க ரொம்ப நேரம் என்னையே பாத்துட்டிருந்தீங்க உங்கள பாத்தா நல்லவரா தெரிஞ்சீங்க அதா………”
“நா அவ்ளோ நல்லவன் கிடையாது உன்ன பாத்தா பேசனும்னு தோணுச்சு அத்தா பாத்த வா அங்க போயி பேசலாம்”
“ம்… சொல்லுங்க”
“நா விபி நீ…. நீ ரொம்ப தைரியமானவ |போல முதல்ல அத மற”
அவள் அவசர அவசரமாக தனது மாராப்பை மறைத்தாள் இருவரும் நடந்துக்கொண்டே பேசினர்.
“நா வேதாகி துணிச்சல் இல்லாம இங்க வந்து பேச முடியுமா”
விபி நெளிந்துக்கொண்டே பேசினான் இதுவரை ஓர் பெண்ணிடம் பேசியது இல்லை அல்லவா இதை கவனித்த வேதாகி
“ஏ கூச்சப்படுறீங்க இராசா பையனா இருந்துட்டு”
“எங்கம்மாவை தவர நா யார்கூடயும் நா அதிகமா பேசமாட்டேன்”
“அதுக்காக இவ்ளோ கூச்சமா”
“இனிமே பழகிக்கிறேன்”
“இனிமேவா நாம எவ்ளோ நேரம் இப்படி பேசப்போறோம்”
“ம்… வாழ்க்கை பூறா”
வேதா விபியை தன் கடைக்கண்களால் ஓரு பார்வை பார்த்தாள் அது விபியை எறித்துவிடும் போன்று இருந்தது வேதா சிறிது சிறிதாக
கால்களை பின்னோக்கி எடுத்து வைத்தாள் பின் ஓட ஆரம்பித்தாள்.
இரு மலர்கள்:
                   வேதா தனது படுக்கையில் படுத்துக்கொண்டு இது சாத்தியமா வாழ்க்கைப்பூறா விபிக்கூட போக முடியுமா
என சிந்தித்து கொண்டிருந்தாள்.தப்பா சொல்லிட்டமோ வேதாகிட்ட அப்படி சொன்னது சரியா நாம வாயிலிருந்து எப்படி அந்த
மாறி வார்த்தை வந்துச்சு வேதா பேர் நல்லதா இருக்கு அவ கூட பேசிக்கிட்டே இருக்கனும்னு தோணுது கண்டிப்பா காலைல
அவ கிட்ட பேசுனும் என விபி யோசித்து கொண்டிருந்தான்.பச்சை வண்ண சூரியன் போன்று கைகளை விரித்து கதிரவன் ஓளியை
உடலின் நடுவே செல்லவிட்டு வேற்றூர் வரை குழாய் எடுத்து சென்று நீர் தரும் தென்னை மரங்களையுடைய தோட்டத்தில்
வேதா விபியை பார்த்தாள் வேதாவின் அருகே விபி சென்றான் யாருமில்லா சமயத்தில் வேதா தயங்கினாள் பின்; அவளே
சென்று பேசினாள் “நீங்க சொன்னத எல்லாம் யோசிச்ச பரவால்ல நல்லா இருக்கு” என்றாள் விபிக்கு  அவ்ளோதான்
உடலெல்லாம் சிலிர்த்தது.இருவரும் பேசினர் தினமும் பேசினர் யாருக்கும் தெரியாமல் பேசினர் உலகை மறந்து பேசினர்.
இரு மலர்கள் இணைந்தது.

அரசாங்க கொள்கை:

              “எம் மக்கள் எங்கே எம் மக்கள் எங்கே பார்வாத்தியாரே” என ஆவேசத்துடன்
சபையின் உள்ளே வந்தார் வைகுந்தர். “என்ன அங்க சத்தம் பார்வாத்தியாரே” என நுழைந்தார் அரசன் கருநீசன் “ஓன்றுமில்லை
அரசே ராபர்ட் பிரபு கேட்டதற்கு இணங்க வீரர்களை கடல் தாண்டி அனுப்பினோம் அல்லவா அது குறித்து கேட்கிறார்”.
என பதிலளித்தார் பார்வாத்தியார். “வைகுந்தரே கவலை வேண்டாம் உம்மக்கள் திரும்பி விடுவர்” என்றார் கருநீசன். “நீர் நமது
சமஸ்தானத்திற்காகவா போரிட்டீர் நீர் அடிமையாய் இருக்கும் இடத்தில் எங்களை அடிமையாக்க நினைக்கிறீரா?” என கேட்டார்
வைகுந்தர் “நீங்கள் எல்லோரும் என் அடிமை என்பதை மறந்துவிடாதீர் அதுமட்டுமன்றி நமது சமஸ்தானம் இல்லை எமது
சமஸ்தானம்”
“ஆடாதீர் நீயே பிரிட்டிசாரின் அடிமைதான் எங்கள் வரி மூலம் உன் கடனை கட்டிக்கொண்டிருக்கிறாய் என்பதை மறந்துவிடாதே நீசா
நாங்கள் மீசை வளர்க்க உனக்கென் வரி கட்ட வேண்டும் எம் பெண்டீர் மார்பை மறைக்க உனக்கென் வரி கட்ட வேண்டும் நம்மை
யாரும் எதிர்க்கவில்லை வெள்ளை இராஜ்யத்துக்கு உதவத்தான் நம் வீரர்களுக்கு நீ பயிற்சி அளிக்கிறாய்”
“போதும் நிறுத்து”
“நீ நிறுத்து அனைவரும் ஓர் குலம் என்றிருந்த இந்த நாட்டில் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என நம்மை பிரித்தது யார் என்று
யோசி உனக்கு அடிமைகள் இருந்தால்தான் நீ தலைவன் ஆக முடியும் என்று யார் கூறியது”
“இதுவே இயற்கை நியதி”
“இயற்கை நியதி அல்ல வெள்ளை இராஜ்யத்தின் சதி”
“வரி கட்டினால்தான் நாம் உயர முடியும்”
“இவ்வாறு சொல்லி உன்னை அவர்கள் ஏமாற்றினார்கள் நீ எங்களை ஏமாற்றுகிறாய் வரி கட்டினால் உயர்வது நாட்டில் வாழ்பவர்கள்
அல்ல நாட்டை ஆள்பவர்கள்”
“நான் உயரவில்லையே”
“நீ ஆள்பவனில்லையே”
“உனக்கு தேவை உன் மக்கள் தானே இன்னும் இரண்டு மாதத்தில் நாடு திரும்புவர் போ”
“திரும்பவில்லை எனில் புரட்சி வெடிக்கும் உன்னை அடிமை பதவியிலிருந்து  விடுவிப்பேன்”என கூறி வைகுந்தர் விடைப்பெற்றார்.
பார்வாத்தியார் “அமைதி வேண்டின் போருக்கு வீரர்களை அனுப்ப அவர்கள் கேட்கிறார்கள் இவர் தெரியாமல் பேசுகிறான்” என கூறினார்
“அதுவேஇ அரசாங்க கொள்கை”

மலரே மலரே:

                 “எங்கம்மா ஏ மடியில படுத்தது போதும் இன்னொருத்தி மடியில எப்ப படுக்கப்போறன்னு கேட்டாங்க ஆனா
ஊன் மடியில படுப்பன்னு நெனைச்சே பாக்கல”என வேதா மடியில் கிணற்றோரமாக படுத்துக்கொண்டு விபி  கேட்டான.;
“ஏன்…….” என அதிகார தோரணையில் கேட்டாள் வேதா
“நீதான் பெண்ணேயில்லயே”
“உன்ன………” என வேதா விபியின் நெஞ்சில் பாசமாக குத்தினாள்.விபி வேதாவை கட்டியனைத்தான் வேதா மறுபடியும் தனது
இடது கையால் விபியின் நெஞ்சை குத்தினாள். “இதல்லாம் சரிப்பட்டு வருமா?” என சோகமாக கேட்டாள் வேதா
“ஏ எவர் எதிர்த்தாலும் என் இறுதி மூச்சு வரை உன்கூடதா என் வாழ்க்கை ஏ உனக்கு தெரியுமா எனக்கு இந்த உலகத்துல புடிச்சவங்க
இரண்டே பேர்தா ஓண்ணு எங்க அம்மா அப்பறம் அப்பறம்” என வேதாவின் தாடையை பிடித்து “நீதான்……” என்றான் விபி
“சரி நானே அழகில்ல என்கிட்ட உனக்கு என்ன பிடிக்கும்”
“தெரியல….. ஆனா என்ன பாத்துன்ன நீ உ மாராப்பை மறைக்கறதும் சட்டுனு ஊ வேர்வைய துடைக்கறதும் ஊ கருப்பு எல்லாம்
புடிச்சுருக்கு ஆனா இதல்லாம் எனக்கே தப்பா தெரியுது”
“அம்மாகிட்ட சொல்லலாம்ல” திடீரென விபி வேதா மடியில் இருந்து எழுந்து “இதுதா நாம காதலர்களா முதலும் கடைசியுமாய்
இனிமே நாமே மணமேடையிலதா சந்திக்கனும் நா அம்மாகிட்ட பேசுற”
“அம்மா சரி ராஜா”
“அவர் ஓத்துக்கலனா நாம எங்க மாமா கோயமுத்தூர்ல இருக்காரு அங்க போயி விவசாயம் பாத்து உன்ன காப்பத்துறன் எனக்கு
உன்ன ரொம்ப பிடிக்கும் தெரியுமா வேதா உன்ன விட்றமாட்டன்டீ”
“சரி கடைசியா என்ன கடலுக்கு மட்டும் கூட்டிட்டு போங்க”
“ச்சேரி” என்று கூறி வேதாவின் கழுத்தில் ஓர் அழகிய தங்க சங்கிலியை மாட்டினான் விபி வேதா கழுத்தை தொட்டு
பார்த்துவிட்டு விபியை பார்க்க விபி புன்னகையை பூத்தான்.

கடலே கடலே :

                     “ஏங்க கரையில யாருமே இல்ல”
“ஆ உன்ன எப்படி எல்லார் இருக்கற இடத்துக்கு எப்படி கூட்டிட்டு வரது இங்கதா யாரும் வர மாட்டாங்க”
இருவரும் கடற்கரையில் ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.அலைகள் இவர்களை தொந்தரவு செய்ய கூடாது என எண்ணியோ
ஓய்ந்திருந்தது. “அம்மா என்ன சொன்னாங்க” என சோகத்தொனியில் கேட்டாள் வேதா. “சொன்னே பக்கத்து சமஸ்தானத்துல பெண்
எனக்கு பாக்கறாங்க” என விபி கூறிவிட்டு திரும்பி பார்க்கும்பொழுது வேதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது “ஏ அப்பா
அப்படித்தான் நா உன்ன விடுவனா” என விபி வேதாவை சமாதானப்படுத்தினான்.வேதா சிரித்துக்கொண்டே சொன்னாள்
“நம் முதற்பார்வையில் அங்கத்துடன் உரையாடுவாய் என்று நான் நினைக்க ஆத்மாவுடன் உரையாடிச் சென்றாய் மற்றவங்களுடன்
பேசி சலித்ததால் என்னவோ உனை பார்த்தால் நா எழ மாட்டேங்குது என் கண்கள் விடியறப்ப வர சூரியன் மாறி கீழே பாக்குது
என் பெண்மை என்னை கொள்ளுது உன்னால் காலம்பூறா உன் விழிப்பார்வை போதும் இந்த உனக்கு”
“ஏ வாயாடி பெரிய மனு~pயாட்ட நாயம்பேசுற” எனக்கூறி வேதாவை துரத்த வேதாவும் ஓட ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து
இருவரும் அமைதியானார்கள் அலைகளை ரசித்துக்கொண்டு அவர்களுக்காகவே அலைகள் எழுந்தது போலும் அமைதியாக கடற்கரை
மணலில் சூரிய மறைவை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். “ஏங்க நா இப்ப செத்துட்டா என்ன செய்வீங்க” என வேதா விபியிடம்
கேட்;க “நானும் செத்துருவன்” என விபி கூறினான்.
வேதாவும் நாங்கிலியும்:
                       “அக்கா நீங்க எப்ப மாமாவை பாத்தீங்க” என நாங்கிலியிடம் வேதாகி கேட்டாள்
“அன்னைக்கு ஓரு நாள் நம்ம வீட்டுக்கு மாமா வந்தாரு அப்ப தெரியாது அவர் எனக்கு முறை மாமா வேணும்னு பாத்த உடனே அவர
எனக்கு பிடிச்சிருந்தது ரொம்ப நாள் அவர் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு இருந்தாரு அவர பாக்க பாக்க அவரு மேல ஆசை ரொம்ப
அதிகமாச்சு அவருக்கும் அப்படித்தான் போல தீடீர்னு ஓர் நாள் வந்து என்னை கட்டிக்கறீயான்னு கேட்டுட்டாரு எனக்கு தரையில
இருக்கனா ஆகாசத்துல இருந்தனான்னு எனக்கே தெரியல அப்படியே போனவதா ஆனா என்ன குழந்தையில்ல அதுதா குறை”
“இப்பல்லாம் ஏன்க்கா சோகமாவே இருக்கீங்க மாமா இல்லாததாலியா”
“ஆமான்டீ வேணா வேணான்னு சொன்ன கேட்காம போருக்கு போனாரு இன்னும் திரும்பல அதா வைகுந்தர் ஐயா திருப்ப
முயற்சி பண்ணிட்டு இருக்காரு”
“அக்கா உங்ககிட்ட ஓன்னு சொல்லனும்”
“என்ன சொல்லுடி”
“அக்கா……”
“ஏ நீயும் யார்கிட்டயோ மாட்டிக்கிட்டயா…….” என கூறி வேதாவின் இடுப்பை கிள்ளினாள் நாங்கிலி வேதா உள்ளுக்குள்
நகைப்பதை போல் நகைக்க “ஏ யார் அவன்”  “அக்கா யார்கிட்டயும் சொல்லிடாதீங்க”
“சொல்லமாட்டன்டீ அவனும் உன்ன ம்ம்ம்ம்…..”
“ம் அப்ப சொல்லு”
“விபி ராஜா பையன்”
நாங்கிலி அதிர்ச்சி கலந்த பார்வையில் வேதாவை பார்த்தாள் “ஏ எப்டிடீ”என கேட்டாள் நாங்கிலி.
“சொல்லனும்னு தோணுச்சு க்கா அதா”
“சரிடீ உனக்கு என்ன உதவினாலும் நா பண்ற”
“ஏ வாங்கடீ” என உடன் பணி செய்பவள் அழைத்தாள் “என்னடி ரெண்டு பெரிய மனுஷிக ரகசியம் பேசறீங்க” என
கேட்டாள் அவள்.அதற்கு வேதா “நா குழந்தக்கா..” “தெரியுது ரெண்டு வெளிய வந்து தொங்கும்போதே” என அவள்
கூறியவுடன் உடனிருந்தவர்கள் சிரித்தனர்.

வாரிசு:

           “அப்பா எனக்கு கல்யாணம் வேண்டா நா ஏற்கனவே ஓரு பெண்ணை விரும்புறேன்”என தந்தை நீசனிடம்
கேட்டான் விபி“அந்த பெண்ணை நீ மணமுடித்தால் உனக்கு போட்டியே இல்லாம ஓரு சமஸ்தானம் கிடைக்கும் எவளோ ஓரு
ஏழை பெண்ணிற்காக அதை இழந்துவிடாதே”
“உங்களை போன்ற அடிமை ஆட்சி எனக்கு வேண்டாம் எனக்கு அவளே போதும்”
“தலைவனின் மகன் தாழ்ந்தவளை மணக்கலாமா மகனே”
“தலைவனா மக்களை ஓன்றுக்கூட்டுபவனே தலைவன் மக்களை பிரித்தாள்பவனில்லை”
“இப்பொழுது நாட்டில் இக்கட்டான நிலை இருக்கிறது நீ உன் மாமாவின் கோட்டைக்கு போ”
“நான் அவளை திருமணம் செய்தே தீர்வேன்”
“நான் உன்னை கவனிக்கனும்னு இல்ல நம்ம சமஸ்தானத்தில் பல பிரச்சனை போய்ட்டு இருக்கு அத கவனிக்கவா”
“நீங்கள் சமஸ்தானத்தை கவனியுங்கள்  என் வாழ்க்கையை நானே கவனித்துக்கொள்கிறேன்”என கூறிக்கொண்டு
கோபத்துடன் வெளியே வந்தான் விபி.எதிரே அவனது தாய் வந்தார் “வணங்குகிறேன் தாயே” என்றான் விபி
“நீ நல்ல முடிவுத்தான் எடுத்துள்ளாய் மகனே”
“தெரியும்மா”
“உனக்கு பிடிச்சத நீ செய்”
“நன்றி அம்மா”என கூறி விடைப்பெற்றான் விபி.

புரட்சி:

         ஓர் மாலை வேளையில் வைகுந்தர் மக்களை ஊரின் நடுவே அழைத்திருந்தார் ஊர் மொத்தத்தையும் வைகுந்தர் கூட்டி
 பேச தொடங்கினார் “நம் மக்களை போருக்கு என்று அழைத்து சென்றார்கள்அல்லவா அவர்களுக்கு ஓர் சோகமான செய்தி” என்று
 சோகத்தொனியில் சொன்னார் பின் “இறப்பு ஏற்பட்டது” என்று கூட்டத்தைநோக்கி உரக்க கூறினார். “என் மகன் நலமா ?” என ஓர்
 தாய் கேட்டாள். “என் தந்தை நலமா?” என ஓருவன் கேட்டான்.“என் கணவன் நலமா?” என நாங்கிலியும் கேட்டாள் அதற்கு
வைகுந்தர் “சென்ற ஐம்பத்தி ஆறு பேரும்” என்று நிறுத்தி சிறிது இடைவேளை விட்டு “இறந்துவிட்டனர்” என்று கூற கூட்டத்தில்
ஓரே பெண்கள் தங்கள் மார்பை அடித்துக்கொண்டு அழுதனர் தந்தையையும் சகோதரரையும் இழந்த ஆண்கள் மண்டியிட்டு அழ
தொடங்கினர் இருநூறு பேருக்கு மேல் குழுமியிருந்த அந்த இடத்தில் எங்கும் அழுகுரலே இடிஇடித்து மழை பெய்து மண்ணை
ஈரமாக்கும் ஆனால் இங்கு மனிதர்கள் கதறி கண்ணீர் விட்டு மண்ணை ஈரமாக்கினர். “ஏன் அழுகிறீர் இழந்ததை எண்ணியா
இழந்ததற்கு அழுதால் இன்னும் எவ்வளவு கண்ணீர் தேவை இனிமேல் இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதை
யோசிப்போம் இனியும் நாம் அடிமையாக இருக்க முடியாது நாம் வரி கட்டிவிட்டோம் அதிகமாக வரி கட்டிவிட்டோம் அனி நாம்
சுதந்திரமாக மீசை வளர்க்கலாம் பெண்கள் மார்பை மறைக்கலாம் உணவு உட்கொள்ளலாம்”
“எப்படி?” என கூட்டத்தில் இருப்பவர்கள் கேட்டனர்.
“நாம் சிகரத்தில் இருக்கிறோம் நம்மால் வானத்தை தொடமுடியாதா படகுகள் கையில் வைத்துக்கொண்டு கடலை ஆட்சி
செய்ய முடியாதா”என ஆவேசமாக பேசினார் வைகுந்தர். மக்களை நோக்கி “அவர்கள் என்ன வைத்தாலும் அதுதான் சட்டம்
என்றால் நாளை நாங்கள் சொல்லும்போது இறந்துவிட வேண்டும் என சட்டம் போட்டாலும் போடுவர்  ஓர் நாள் வெள்ளிக்கு
மதிப்பென்றனர் பின் தங்கத்திற்கு மதிப்பென்றனர் இப்போது காகிதத்திற்கு மதிப்பென்கின்றனர் அவர்கள் எதற்கு மதிப்பு
என்கிறார்களோ அதற்கே மதிப்பு என்றால் நாம் யார்?” என்று கூறி மூச்சை உள்ளிழுத்து “இனி நாம் வரி கட்ட கூடாது
அவர்கள் போட்ட சட்டங்களை நாம் மதிக்ககூடாது வரி கட்டாதீர்”
“நம்மை கொன்றுவிட்டால்?”
“புரட்சியாளன் இரத்ததிற்கு பயப்படலாமா நாங்கிலி நீதான் துணிச்சல் மிக்கவள் வெள்ளை ராஜ்யத்தையே பயம்
கொள்ள வைத்த வீர பெண்மணி பெயரில் அமையப்பெறும் ஜான்சி இராணி படைக்கு நீயே தலமை ஏற்றுக்கொள்”
என கூறி மக்களுக்கு ஆணையிட்;டார்.

வெயிலை வென்ற வெப்பம்:

                        கூற வார்த்தையில்லை என்பதை விட அங்கே எதுவுமில்லை அது ஓர் அங்காங்கே
நட்டு நின்ற பனை மரம் நிறைந்த பொட்டல் காடு வெயில் வேறு கொளுத்தி எடுத்தது அங்கே நடந்து கொண்ருக்கும் போது
மேலே பார்த்தால் வண்ணங்கள் பல கண் முன்னே தெரியும் சோர்வாய் இருக்கிறதே என்று சிறிது அமர்ந்தால் வெள்ளை
அணுக்கள் கண் முன்னே தெரியும் அங்கே விபியும் வேதாகியும் ஓருவரையொருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்
“இப்படியே இருந்தா எப்படி எதுக்கு கூப்டீங்க” என கேட்டாள் வேதாகி
“ம்… நீ ஓரு பொண்ணானு பாக்கதா கூப்ட…”
“ச்ச்சீ ஏன்  எப்ப பாத்தாலும் இதே கேள்வி”
“கேக்ககூடாதா போ நா எதுவும் பேசல”
வேதா விபியின் கையை பிடித்து “வெளையாட்டாய் கூட என்னை ஓதுக்காதே விதி நம்மள ஓதுக்கிருமோன்னு பயம்
எனக்கு” என்றாள்.
“ஏ என்ன மன்னிச்சுரு உனக்கு ஓண்ணு சொல்லவா ஏ இதயத்தில் நீ இருக்கிறாய் என்பதை விட என் இதயமாகவே
நீ இருக்க அவ்ளோ சுலபமா உன்ன விட்றமாட்டேன்”
“விபி நா ஏங்கறன் வாழ்வின் ஓவ்வொரு நொடியும் உன்கூட இருக்காதன்னு நினைச்சு ஆனா அதே சமயம் நா
சுந்தோசப்படறேன் உன்கூட வாழ்ந்த ஓவ்வொரு நொடியும் நினைச்சு”
இருவரும் ஓருவரையொருவர் கண்களால் காதல் செய்து கொண்டிருந்தனர் இருவர் கை விரல்களும் ஓன்றையொன்று
நெருங்கியது வெப்பம் நிறைந்த விபியின் விரல்களின் உ~;ணம் தாங்காமல் வேதா கையை எடுத்தாள் வேதா குறுகி
அமர விபி வேதாவை இடையோடு சேர்த்து கட்டியணைத்தான் பூத்து குலுங்கிய வேதாவின் அங்கங்களை தொட்டான்
விபியின் உஷ்ணத்தால் வேதா சிலாகித்தாள் கிளர்ச்சி அடைந்தாள் இதழ்கள் இரண்டும் இணைய இருவரையும்
வெப்பம் ஆட்கொண்டது இதழ்கள் மட்டுமல்ல இருவரும் இணைந்தனர் அங்கு எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லை
மலர்கள் இணைந்தது இயற்கை வென்றது வெயிலையும் வென்றது அவர்கள் வெப்பம்
 கொஞ்சி கழித்தவுடன் திடுக்கிட்டு எழுந்தான் விபி. இருவரும் தங்களது
உடைகளை சரிசெய்து கொண்டனர். அங்கு பெரு அமைதி ஆட்கொண்டது வெப்ப காற்றின் சத்தம் மட்டுமே
கேட்டது அமைதியை கலைக்கும் விதமாக விபி கண்களில் கண்ணீர் உடன் “தவறிழைத்துவிட்டேன்” என கதறி
அழ தொடங்கினான் “வைகுந்தர் பார்வாத்தியார் என் தாய் கற்பித்த தர்மத்தை நான் மீறிவிட்டேன் அவர்களுக்கு
துரோகம் இழைத்துவிட்டேன் அஃது பெரும் பாவமல்லவா?” என கூறி அழுதான். அவன் தோள்களில் மலர் போன்ற
கரத்தை வைத்து “விபி இதுவே இயற்கை ஆணும் பெண்ணும் சஞ்சலப்படுவது இயற்கை அதன் விளைவுகள்
தவறொன்றுமில்லை இதுவே இயற்கை நியதி”
“பெரிய மனிதர்களிடம் தர்மத்தை கற்ற என் மனம் சலனப்படலாமா?”
“விபி சலனப்பட்டால்தான் அது மனம் மனம் இருந்தால்தான் அவன் மனிதன்  நான் உனக்கானவள்; நாம்
இணைந்ததில் தவறில்லை”
“நீ என்ன கூறினாலும் சரி நான் செய்தது தவறே என் மனம் என்னை கொள்கிறது வாழ்க்கையில் நான் செய்த
மிகப்பெரிய தவறு இது இதை நானே திருத்தி கொள்ள வேண்டும் இன்னும் இரு வாரங்களில் நமது திருமணம்
நாம் மனதால்இஉடலால் இணைந்தோம் இனி ஊரை கூட்டி மக்கள் கண் முன்னே இணைய வேண்டும் நாளை
மறுநாள் நான் உன்னை சந்திக்க தாயிடம் சம்மதம் பெற வருவேன்”என்று கண்ணீரை துடைத்துக்கொண்டு
எழுந்து சென்றான் விபி. சிறிது நேரம் கழித்து வேதாவும் கண்களை துடைத்துக்கொண்டு எழுந்து வீட்டுக்கு
கிளம்பினாள் வழியில் ஓரு சத்தம் ஓரு பெண்மணி இவளை நோக்கி ஓடி வந்து “உங்க அம்மா ஆம்பளங்க
போற கிணத்து வேலைக்கு போயி தவறிட்டா” என சோகம் கலந்த குரலில் கத்தி கூறினாள்.

மலர்கள் உதிர்ந்தது:

                        மக்கள் அனைவரும் வரி கட்டாமல் புரட்சி செய்கிறார்கள் என்று கேள்விப்பட்ட
அரசன் கருநீசன் மக்களுக்கு பயத்தை பரிசளிக்கும் பொருட்டு; ஓர் ஆணையை பிறப்பித்தார் அதாவது வரி கட்டாத
ஆண்களை கழுவேற்றவும் பெண்களை மானபங்கபடுத்தவும் ஆணையிட்டார்.ஊரின் நடுவே பரையை அடித்து கொண்டு
ஓருவன் “ ஆயம்மாரே……இதனால ஊர் ஜனங்களுக்கு தெரிவிப்பது என்னன்னா வரி வசூலிக்க பார்வாத்தியார் வந்து
கொண்டிருக்கிறார் வரி கட்டாதவங்க கற்புக்கும் உயிருக்கும் சமஸ்தானம் பொறுப்பேற்காது ஆயம்மாரே…….” என்றான்
பார்வாத்தியார் மேல் மக்கள் மனதில் மரியாதை இருப்பதால் அவரை எதிர்க்கமாட்டர் என்ற நோக்கில் அவரை
அனுப்பினார் கருநீசன்.முதலில் ஓர் வீட்டின் வாசலுக்கு பார்வாத்தியார் இரு வீரர்களோடு சென்றார். அதில் ஓர்
வீரன் “அய்யாமாரே அம்மாமாரே தாயி வீட்டு பெரிய மனுசங்க ஆயம் கேக்க வந்துருக்;கோம் சாமி…..
வெளிய வா சாமி….” ஓரு கணவனும் மனைவியும் வெளியே வந்தனர் கணவன் “நாங்க ஆயம் கர்ணம் எதுவும்
கட்ட மாட்டோம் சாமி” என்றான்.அதில் ஓரு வீரன் தனது கையில் வைத்திருந்த கம்பால் அவனை ஓங்கி
அடித்தான் அவன் கீழே விழுந்தான் மறு அடி அடிக்க அவன் கம்பை ஓங்கினான் பார்வாத்தியார் வீரனை
தடுத்தார் “கட்டிவிடு….” என்றார். “பார்வாத்தியாரே” என்றான் அவன் மனைவி சில செப்பு நாணயங்களை
 எடுத்து வந்து தந்தாள்.
வேதாகி வீட்டின் பின்புறம்
“ஏ அழாதே நான் உன்ன நல்லா பாத்துப்பேன்னு அம்மா நம்பனாங்க போல அதா சாமிகிட்ட போய்ட்டங்க
அவங்க உனக்காகத்தானே வாழ்ந்தாங்க நீ அழுதா அவங்களுக்கு பிடிக்காதில்ல” என வேதாவை
சமாதனப்படுத்தி கொண்டிருந்தான் விபி. “அழுதா பிடிக்காதுன்னு தெரியுமில்ல அப்ப ஏ இப்படி பண்ணுச்சு”
என அழுதாள் வேதாகி. “சரி அழாத” என்று வேதாவை கட்டிக்கொண்டான் விபி “என்ன எப்ப வந்து நீ
கூட்டிக்கிட்டு போ போற என்ன நீ ஏமாத்திருவ போல” என அழுதுக்கொண்டே கேட்டாள் வேதாகி.
“ஏ நா மேலே இருக்கேன் உனக்காக கீழ வருவன் நா அரசனானலும் எனக்கு நீ மட்டும்தா அரசி
என் ஆண்மையை ஆட்சி செய்தவள் நீ உன் பெண்மையை ஆட்சி செய்ய சிறிது நேரம் தருவாயா”
என்று வேதாவை அணைக்க செல்ல வேதா விபியை தள்ளிவிட்டு “ம் போதும் நீங்க ஏற்கனெவே ஆட்சி
செய்ஞ்சது கண்டிப்பா என்ன நீங்க முழுமையடைய வப்பீங்கன்னு நினைக்கிற”
“ம்… புரியல.:”
“ஆ நா உங்கள அப்பா ஆக்கிருவன்னு நினைக்கற”
“சரி நம்ம கண்டிப்பா ரண்டு நாள்ல பொள்ளாச்சி போறோம் அங்க போயி புது வாழ்க்கைய ஆரம்பிப்போம்”
“சரி நீங்க இப்ப போங்க இங்க ரொம்ப பிரச்சனையா இருக்கு”
“பார்வாத்தியார்க்கு நம்ம காதல் தெரியும் அவர் இங்க வரமாட்டாரு பயப்படாத”
ஊரில்
    இந்த முறை நாங்கிலி வீட்டின் முறை நாங்கிலி வீட்டின் முன் பார்வாத்தியாரும் இரு வீரர்களும் வந்தனர்
அதில் ஓர் வீரன் “அய்யாமாரே அம்மாமாரே தாயி வீட்டு பெரிய மனுசங்க ஆயம் கேக்க வந்துருக்கோம் சாமி…
வெளிய வா சாமி..” என்றான் நாங்கிலியும் அவர்களுக்காகவே காத்துக்கொண்டிருந்தது போல் உடனே வெளியே
வந்தாள் தலை குனிந்தபடி நின்றிருந்த பார்வாத்தியாரை கவனித்து “தர்மத்தை கற்றவர்கள் தர்மத்தை பின்பற்ற
மாட்டார்களா பார்வாத்தியரே” என்றாள் சிறிது இடைவெளிவிட்டு “இங்கு நடப்பவற்றை அறிந்தும் அமைதியை
கடைபிடித்தீரானால் இதுதான் தர்மமா? ம் நீங்கள் என்ன செய்வீர் ஆயம்தானே வேண்டும் என் உயிரை காக்க
அல்ல கற்பை காக்க”என்று கூறி உள்ளே சென்று ஓர் வாழை இழையையும் அரிவாளையும் எடுத்து வந்தாள்
இழையை நிலவின் அருகே விரித்தாள் தன் மார்பை மறைத்திருந்த துணியை விலக்கினாள் “என் உயிருக்கு
உயிரான கணவனை என்னிடம் இருந்து பிரித்தீர்” என்று கூறி தனது வலப் பக்க மார்பை அறுத்தாள் அறுத்து
அந்த பாகத்தை இழையில் வைத்தாள் பார்வாத்தியர் அதிர்ந்தார் கோபக்குரலில் “என் உயிருக்கு ஆபத்து
என்று கூறினாலும் நான் அடிப்பணியமாட்டேன்” என்று கூறி தனது இடப்பக்க மார்பையும் சதையோடு சேர்த்து
அறுத்தாள் இரத்தம் கொட்டிய உடையோடும் குருதி வழிந்த உடலோடும் மூச்சு காற்றை திணறி திணறி
உள்ளிழுத்து “என்றாவது நாங்கள் உயர்வோம்” என்று கூறி சாய்ந்தாள் நாங்கிலி.கதவில் இரத்தம் படிந்திருந்தது.
வேதாகி வீட்டின் வாசலின் முன் விபியிடம் விடைப்பெற வேதாவும் வந்தாள் சிவந்த விழிகளுடன் இருந்த
வேதா விபியை நோக்கி “நம்ம காதல் ஜெயிக்குமா” என கேட்டாள். விபி வேதாவை நோக்கி கூறலானான்
“கண்ணே கண்களில் தொடங்கி கடைப்பார்வையால் தொடர்ந்து விழி மூடும் வரை நிலைத்து நிற்கும்
நம் காதல்…… உலகம் விழி மூடும் வரை”என்று கூறி முடிக்கும்போது  விபியின் கழுத்தில் வேல்
பாய்ந்தது.வேதா திகைத்து நின்றாள்; வேதாவின் கைகளில் இரத்தம் படிய விபி கழுத்தில் பாய்ந்திருந்த
வேலுடன் இரத்தம் ஓழுக சரிந்தான் வேதாவின் கண்கள் விபி சரிவதை கவனிக்க அங்கு நடப்பதை
முனம் உணர தொடங்கிய உடன் அவள் இட கண்ணில் கண்ணீர் துளித்தது நிலை தடுமாறி
கீழே அமர விபியை தன் மடியில் கிடத்தி குரல் நடுங்கி கதறினாள் கதறி அழ தொடங்கினாள்
“நீசனின் மகன் இறந்துவிட்டான் கொடூரன் அழிந்தான்” என கூறி கைகளில் அரிவாள் வேல் கம்பு
வைத்திருந்த சிலர் கூடி நின்றனர் “இவள்……” என்று கூறி வேதாவை நோக்கி சந்தேக பார்வையை
வீசினர்.சிறிது நேரம் கழித்து வைகுந்தர் அங்கு வந்தார்.மெதுவாக சூழ்ந்திருந்த கூட்டத்தனுள் நுழைந்தார்
ஒருவன் “நாங்கிலி இறப்புக்கு பழித்தீர்தாயிற்று” என்றான் விபியின் குருதி வழியும் உடலை கண்டவுடன்
வைகுந்தர் நிலைதடுமாறினார் அவர்களை நோக்கி “தவறிழைத்துவிட்டீர்” என்றார்.அனைவரும் புரியாத
பார்வை வீசினர் சிறிது இடைவெளிவிட்டு “இவன் ஆளப்பிறந்தவன் தர்மத்தை கற்று நல்வழியில்
நடப்பவன் இந்த உலகிலே நல்லவன் இவன்தான் விபி~ணன் இவன் பெயர் நாமும் வன்முறையில்
செல்லகூடாது என்றுதான் நினைத்தேன் இந்த ராஜ்யத்தை தகர்ப்போம்” என்று உரக்க கூறினார்.
அனைவரும் அந்த சிறிய கோட்டையை முற்றுகையிட செல்ல வேதா விபியை தன் மடியில் வைத்து
அழுதுகொண்டிருந்தாள்.கோட்டையின் வாசலில் மக்கள் கூடினர் கோட்டையின் மாடத்தில் நீசனும்
பார்வாத்தியாhரும் வந்து நின்றனர் “எங்கள்; குல விளக்கை எரித்து சாம்பலாக்கிவிட்டியே” என ஒரு
பெண்மனி அழுதுகொண்டே கேட்டாள் நீசன் “சட்டத்தை கடைபிடிப்பது மக்களின் கடமை நீங்கள்
உங்கள் கடமையை செய்தாள் நானும் அரசனாக இருப்பேன்” மக்களில் ஒருவன் “நீங்கள் போட்டது எல்லாம்
சட்டமாகுமா அதை நாங்கள் மதிக்கவேண்டுமா”என கேட்டான். “அரசன் மக்கள் நன்மைக்காகதான் சட்டம்
இயற்றுவார்” என்று நீசன் கூற “மக்கள் நன்மைக்கா தங்கள் நன்மைக்கா” என கேட்டான் ஒருவன்
“தலை குனிந்திருந்தால்தான் உங்கள் தலை நிமிரும் என ஒர் நாள் கூறினால் நாங்கள் குனிகிறோம்
என்று நாங்கள் நம்பும்போது நீ போடும் சட்டங்கள் எதிராக அப்போது புரட்சி ஏற்படாது” என்று வைகுந்தர்
கூற நீசன் யோசித்துவிட்டு “ கௌரவத்தை விட்டு இங்கு வந்துள்ளீர் யோசிக்க மாட்டீரா… நீங்கள் ஆதரித்து
வந்திருக்கும் பெண் ஒரு சக்கிலிய பெண் அவர்கள் வீட்டில் யாரும் மார்பை மறைப்பதில்லை மீசை வளர்பதில்லை
வரி கட்ட முடியாத வீடு அது மீசை கௌரவம் என்று வரி கட்டி மீசை வளர்க்கும் நீங்கள் எங்கே அவர்கள்
எங்கே பெண்ணின் மானம் காக்க வரி கட்டும் நீங்கள் எங்கே அவர்கள் எங்கே உங்கள் முன்னோர்களை
அவமானப்படுத்த போகிறீர்களா……..” என உரக்க கூற  கூட்டம் கலைந்தது திடீரென்று ஆயிரக்கணக்கான வீரர்கள் குதிரையில்
அங்கு வந்து மக்களை அடித்து விரட்ட வைகுந்தர் செய்வதறியாது நின்றார்.மக்கள் சிலரை வெள்ளை கிடாய்கள் மக்களை துப்பாக்கியால் சுட்டனர்.நீசன் பார்வாதியரை பார்த்து அசட்டு சிரிப்பு சிரித்தார்.பார்வாத்தியார் “முதலாளி உதவி செய்தார் போலும்”
என்றார் நீசனிடம்.
ஓன்பது திங்கள் கழித்து
            அதே தென்னை சூழ்ந்த இடம் ஆனால் கோவன் பிறப்பிடம் வேதா பிரசவ வலியால் துடிக்க
கதற சிறிது நேரத்தில் கதறும் சத்தம் நின்றது.ஒரு பெண்மணி வெளியில் நின்றிருந்தவரிடம் “பிட்ட சட்சிக்கேட”
என்றாள் அவள் மொழியில் அவர் சோகமானார். இன்னொரு கிழவி வெளியே வந்து கூறலானாள்
“கவல படது ராசா புட்டுன்டாட”.


                                                                                           -ஈ.தமிழ்மதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக